சிவ லிங்கத்தில் விரிசல்! ஜோஷிமத் நிலச்சரிவின் எதிரொலி!

By SG Balan  |  First Published Jan 7, 2023, 4:53 PM IST

உத்தராகண்டின் சங்கராச்சாரிய மாத்வ ஆசிரமத்தில் உள்ள சிவலிங்கத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது ஆன்மிகவாதிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


உத்தராகண்ட் மாநிலத்தில் இமாலய மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரில் நூற்றுக்கணக்கான வீடுகளில் தரையிலும் சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் அங்குள்ள பகவதி கோயில் சேதம் அடைந்தது. இப்போது சங்கராச்சாரிய மாத்வ ஆசிரமத்தில் உள்ள சிவலிங்கத்திலும் விரிசல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல லட்சுமி நாராயணர் கோயிலிலும் சுவர்களில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

Tap to resize

Latest Videos

இதுபற்றி ஜோதிர் மடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரிய சுவாமி ஆவிமுக்தேஷ்வரானந்த், கோவில் சிவ லிங்கத்திலேயே விரிசல் கண்டு பாதிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்தார்.

1976 முதலே அழிவைச் சந்தித்துவரும் ஜோஷிமத்! அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்!

ஜோஜிமத் நகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 500 வீடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் வீதியில் திரண்டு அரசு நடிவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

வாடியா இமயமலை புவியியல் நிறுவனம் 2022ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஜோஷிமத் கட்டப்பட்ட இடத்தின் குறைவான நிலைத்தன்மை கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுருக்கிறது.

1976ஆம் ஆண்டு வெளியான அறிக்கையிலேயே ஜோஷிமத் பகுதி மக்கள் வசிக்க ஆபத்தான பகுதி என்று கூறப்பட்டுள்ளது என புவியியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நிலைமையை ஆய்வு செய்து, அப்பகுதியில் நடைபெற்றுவந்த அரசின் கட்டுமானத் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

click me!