Covaxin vs Covishield: கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவரா நீங்கள்? அப்போ இதை மறக்காம படிங்க!

By Pothy RajFirst Published Jan 7, 2023, 3:35 PM IST
Highlights

கொரோனா வைரஸ் மற்றும் கொரோனா உருமாற்ற வைரஸ்களுக்கு எதிராக எதிராக கோவேக்சின் தடுப்பூசியைவிட, கோவிஷீல்ட் தடுப்பூசிதான் அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் கொரோனா உருமாற்ற வைரஸ்களுக்கு எதிராக எதிராக கோவேக்சின் தடுப்பூசியைவிட, கோவிஷீல்ட் தடுப்பூசிதான் அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோவேக்சின் தடுப்பூசி

கோவேக்சின்தடுப்பூசி, இந்தியாவின் பாரத் பயோடெக் மற்றும் இந்தியன் வைரலாஜி நிறுவனம் இணைந்து உள்நாட்டில் தயாரித்த தடுப்பூசியாகும். இந்தத் தடுப்பூசி பழைய முறையான வைரஸை உயிரிழக்ச செய்து அதிலிருக்கும் ஸ்பைக் புரோட்டீன்களை வைத்து தயாரிக்கப்படும் மருந்தாகும். கடந்த காலங்களில் பலத்தடுப்பூசிகள் இந்த ஃபார்முலாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அழிவின் விளிம்பில் உத்தரகாண்ட் ஜோஷிமத்! கர்னபிரயாகிலும் 50 வீடுகளில் விரிசலால் மக்கள் பீதி

கோவிஷீல்ட் தடுப்பூசி
ஆனால், கோவிஷீல்ட் தடுப்பூசி என்பது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து தயாரித்ததாகும். இதை கோவிஷீல்ட் என்ற பெயரில் இந்தியாவில் சீரம் மருந்து நிறுவனம் தயாரிக்கிறது. அடினோ வைரஸ் எனப்படும் சிம்பன்சி குரங்குகளிடம் காணப்படும் சளி வைரஸில் இருந்து கோவிஷீல்ட் தயாரிக்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் போலவே இந்த வைரஸ் உருமாற்றம் செய்யப்பட்டு உடலில் செலுத்தப்படுகிறது. அதாவது வைரஸில் இருக்கும் ஸ்பைக் புரோட்டின்களில் தீங்கு செய்யும் பகுதியை நீக்கிவிட்டு செலுத்தப்படுகிறது. இதன் மூலம் மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வேகமாக அதிகரிக்கச் செய்து கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும்.

பெண் பயணிக்கு அவமதிப்பு: ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மன்னிப்புக் கோரினார்

இந்நிலையில் மெட்ரிவ் எனும் நிறுவனம் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் மூலம் மனிதர்கள் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்தி அளவுகள் குறித்து ஆய்வு நடத்தியது. 
இதன்படி 2021,ஜூன்  முதல் 2022, ஜனவரி வரையிலான 18வயது முதல் 45 வயது வரையிலான 691 பேரிடம் ஆய்வு நடத்தியது.

இவர்கள் பெங்களூரு,புனேயின் நகர்புற மற்றும் புறநகரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்கள் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின்தடுப்பூசியை சரியான இடைவெளியில் இரு டோஸ்களையும் எடுத்தவர்கள். ஆய்வில் பங்கெடுத்தவர்களிடம் 6 முறை ஆன்ட்டிபாடி பரிசோதனையும், 4 முறை செல்லுலார் ப ரிசோதனையும் நடத்தப்பட்டது.

தடுப்பூசிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, ​​இரண்டு தடுப்பூசிகளும் செரோனெக்டிவ் மற்றும் செரோபோசிட்டிவ் நபர்களிடம் குறிப்பிடத்தக்க நோய் எதிர்ப்புச்சக்தியை வெளிப்படுத்தின.

தனுஷ்கோடியாக மாறும் ஜோஷிமத்!600 குடும்பங்களைஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றும் உத்தரகாண்ட் அரசு

இதில் கோவேக்சின் தடுப்பூசி செரோநெகட்டிவ் மற்றும் செரோபாசிட்டி தனிநபர்களிடம் வெளிப்படுத்திய நோய் எதிர்ப்புச்சக்தி அளவைவிட, கோவிஷீல்ட் தடுப்பூசியில் நோய் எதிர்ப்புச்சக்தி அளவு அதிகமாக இருந்தது.

ஐஐஎஸ்இஆர் நிறுவனத்தின் நோய்தடுப்பு சிறப்பு வல்லுநர் வினிதா பால் கூறுகையில் “ இளம் தலைமுறையினர் செலுத்திக்கொண்ட கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகள் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி அளவு மாறுபடுகிறது. 

இதில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புச்சக்தி அளவைவிட, கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டர்களுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச்சக்தி கிடைக்கிறது, உருவாகியுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டர்களுக்கு ரத்தத்தில் உருவாகும் நோய் எதிர்ப்புச்சக்தி நீண்ட காலத்துக்கு அதிக அளவில் நீடிக்கிறது. இடைக்கால முடிவுகளின்படி பார்த்தால், கோவிஷீல்ட் தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்புச் சக்திஅளவு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கிடைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியைவிட அதிகமாகும். 

கொரோனா டெல்டா வேரியன்ட், ஒமைக்ரான், ஒமைக்ரான் உருமாற்ற வைரஸுக்கு எதிராக கோவிஷீல்ட் தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது என்று தெரிவிக்க முடியாது. இருப்பினும் கோவேக்சின் தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது, கோவிஷீல்ட் சிறப்பாகச் செயல்படுகிறது.

இ்வ்வாறு பால் தெரிவித்தார்

click me!