Cold in Delhi:டெல்லியை உறைய வைக்கும் கடும் குளிர்! இந்த சீசனில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவால் மக்கள் அவதி

By Pothy RajFirst Published Jan 7, 2023, 2:39 PM IST
Highlights

டெல்லியில் இந்த சீசனில் கடும் குளிர் மக்களை நடுங்கவைத்து வருகிறது. இந்த சீசனில் இதுவரை இல்லாத வகையில் மிகக்குறைவாக 2.2.டிகிரி செல்சியஸ் குளிர் இன்று பதிவானது என்று வானிலை மைமயம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இந்த சீசனில் கடும் குளிர் மக்களை நடுங்கவைத்து வருகிறது. இந்த சீசனில் இதுவரை இல்லாத வகையில் மிகக்குறைவாக 2.2.டிகிரி செல்சியஸ் குளிர் இன்று பதிவானது என்று வானிலை மைமயம் தெரிவித்துள்ளது.

டெல்லி பாலம் பகுதியில் 50 மீட்டர் தொலைவுக்கு எதிரே எந்த வாகனம் வருகிறது என அறியமுடியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சாலைப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பெண் பயணிக்கு அவமதிப்பு: ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மன்னிப்புக் கோரினார்

பாலம் இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தின் அருகே காலை 5.30 மணிக்கு 25 மீட்டருக்கு எதிரே எந்த வாகனம் வருகிறது எனத் தெரியாத நிலையில் பனமூட்டம் மூடியிருந்தது.

ரயில்வே செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ டெல்லியில் கடும் பனிமூட்டம் இன்றுஇருந்ததால், டெல்லிக்கு வரவேண்டிய 36 ரயில்கள் இன்று 7 மணிநேரம் வரை தாமதமாக வந்தன”எனத் தெரிவித்தார்
டெல்லி சப்தர்ஜங் வானிலைமையம் கூறுகையில் “ டெல்லியில் இன்று இந்த சீசனில் இதுவரை பதிவாகாத வகையில் 2.2டிகிரி செல்சியஸ் வெப்பம் காலை பதிவானது. லோதி சாலை, அயநகர் சாலை, ரிட்ஜ் சாலைப் பகுதிகளில் 2 டிகிரி செல்சியஸ் பதிவானது. 

அழிவின் விளிம்பில் உத்தரகாண்ட் ஜோஷிமத்! கர்னபிரயாகிலும் 50 வீடுகளில் விரிசலால் மக்கள் பீதி

காற்றில் ஈரப்படம் காலை 8.30 மணிவரை 100 சதவீதம் இருந்தது. அடுத்துவரும் நாட்களும் வானம் தெளிவாக இருக்கும், அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவும், பகலில் குளிரான வானிலை நிலவும். குறைந்தபட்ச வெப்பநிலை பகலில் 16 டிகிரிவரைதான் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளன.

டெல்லியில் நிலவும் கடும் குளிரால் மக்கள் காலை நேரத்தில் வெளியே வர முடியாமலும், வேலைக்குச் செல்பவர்கள் இரு சக்கர, நான் சக்கர வாகனங்களை இயக்க முடியாமல் தடுமாறினர். கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு  பெரும் அவதிக்குள்ளாகினர்.

click me!