Joshimath Sinking:தனுஷ்கோடியாக மாறும் ஜோஷிமத்!600 குடும்பங்களைஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றும் உத்தரகாண்ட் அரசு

By Pothy RajFirst Published Jan 7, 2023, 12:50 PM IST
Highlights

ஆழிப்பேரலையால் அழிந்து மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக தனுஷ்கோடி நகரம் எவ்வாறு மாறியதோ அதேபோல் பூமிவிழுங்கும் பகுதியாக உத்தரகாண்ட் ஜோஷிமத் மாறிவிட்டது.

ஆழிப்பேரலையால் அழிந்து மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக தனுஷ்கோடி நகரம் எவ்வாறு மாறியதோ அதேபோல் பூமிவிழுங்கும் பகுதியாக உத்தரகாண்ட் ஜோஷிமத் மாறிவிட்டது.

இதனால் ஜோஷிமத்தின் அபாயகரமான பகுதியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் 600 குடும்பங்களை அவசர அவசரமாக வெளியேற்றும் பணியில் உத்தரகாண்ட் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக தேசியபேரிடர் மீட்புக் குழுவினரை உத்தரகாண்ட் பணியில் ஈடுபட வைத்துள்ளது.

எல்ஜிபிடி: ஒரேபாலின திருமண அனுமதி கோரும் மனு!மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

இது தவிர ஜோஷிமத் நிலப்பரப்பு எவ்வாறு உள்ளது, அங்கு மனிதர்கள் எதிர்காலத்தில் வாழமுடியுமா, நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள் என்ன என்பது குறித்து ஆய்வுசெய்ய நிலவியல் வல்லுநர்கள் குழு, புவியியல் வல்லுநர்கள், குழு , தேசியபேரிடர் மீட்புக்குழு, கட்டுமான வல்லுநர்கள், ஐஐடி வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வல்லுநர்களை ஆய்வில் உத்தரகாண்ட் அரசுஈடுபடுத்தியுள்ளது.

ஜோஷிமத் பகுதியில் ஆபத்தான இடங்கள், அபாயகரமான பகுதிகள், நிலப்பிளவு ஏற்பட்ட பகுதிகள்,வீடுகளில் ஏற்பட்ட பிளவுகள் ஆகியவற்றை உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி இன்று ஆய்வு செய்ய உள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் ரிஷிகேஷ் பத்ரிநாத் செல்லும் வழியில் இமயமலை அடிவாரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. தவுலிங்கா, அலக்நந்தா ஆகிய இரு நதிகளும் ஜோஷிமத் நகரில் சங்கமித்து செல்கின்றன. இந்த நகரைச் சுற்றி ஏராளமான சுற்றுலாத் தளங்கள் இருப்பதால், ரிஷிகேஷ் , பத்ரிநாத் செல்பவர்கள் இங்கு தங்கி செல்கிறார்கள்.

அழிவின் விளிம்பில் உத்தரகாண்ட் ஜோஷிமத்! கர்னபிரயாகிலும் 50 வீடுகளில் விரிசலால் மக்கள் பீதி

இந்த ஜோஷிமத் நகரில் ஏறக்குறைய 20ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.ஆனால், அழகு இருக்கும் இதேநகரில் அதிக ஆபத்தும் இருக்கிறது. இந்த நகரில் அடிக்கடி நிலச்சரிவு, பூகம்பம் ஏற்படும் பகுதியாக புவியியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 

இந்நிலையில் ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக திடீரென நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து ஏராளமான வீடுகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளன. பல வீடுகள் திடீரென மண்ணில் புதைந்துள்ளன. இதனால் 3 ஆயிரத்தும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மக்கள் வீடுகளில் குடியிருக்க அச்சப்பட்டு சாலைகளிலும், தெருக்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி நிருபர்களிடம் கூறுகையில் “ இப்போதுள்ள சூழலில் மக்களின் உயிரைக் காப்பதுதான் முதன்மையானது. ஆதாலல் ஜோஷிமத்தில் இருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணியில் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்

'நான் கடவுள் பெருமாளின் மனைவி': பெண்ணின் முடியை இழுத்து கோயிலை விட்டு வெளியேற்றிய கொடுமை

ஜோஷிமத்தில் சிங்தர்வார்டில் உள்ள ஒரு கோயில் நேற்று திடீரென இடிந்து விழுந்தது.ஆனால், கோயில் இடிந்து விழுந்த நேரத்தில் பக்தர்கள் யாரும் இல்லை. ஜோஷிமத்தில் ஆபத்தான சூழல் நிலவுவதால் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை அரசு அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

சார்தம் சாலைத் திட்டம், என்டிபிசியின் நீர்மின்சாரத் திட்டம் உள்ளிட்ட முக்கியக் கட்டுமானப்பணிகள் அனைத்தும் அடுத்தஉத்தரவு வரும்வரை நிறுத்தப்பட்டுள்ளன. ஜோஷிமத்தில் வாழமுடியாத சூழல் நிலவுவதையடுத்து, ஏராளமான மக்கள் அரசு அலுவலகங்கள் முன் நேற்றிலிருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜோஷிமத்தில் ஆபத்தான பகுதியில் குடியிருக்கும் மக்களை ஹெலிகாப்டர் மூலம் வேறு இடத்துக்கு மாற்றும் பணில் உத்தரகாண்ட் அரசு ஈடுபட்டுள்ளது. புதியவீடுகளில் குடியேறும் மக்களுக்கு மாத வாடகையாக ரூ.4ஆயிரத்தை உத்தரகாண்ட் அரசு வழங்க இருக்கிறது. இதையடுத்து, 40 குடும்பத்தினர் தற்காலிக முகாம்களை விட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளனர்.

தனுஷ்கோடி நகரை கடல்கொண்டதைப் போல், ஜோஷிமத் நகரை பூமிஉட்கொள்ளுமா என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது

click me!