Ayodhya Ram Temple : சூரியகதிர்கள் தலையில்படுமாறு 9 அடி உயரத்தில் அயோத்தியில் புதிய ராமர் சிலை நிறுவ முடிவு

Published : Jan 07, 2023, 05:02 PM IST
Ayodhya Ram Temple : சூரியகதிர்கள் தலையில்படுமாறு 9 அடி உயரத்தில் அயோத்தியில் புதிய ராமர் சிலை நிறுவ முடிவு

சுருக்கம்

அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் ராமர் கோயிலில், 9 அடி உயரத்தில் ராமர் சிலை நிறுவப்பட உள்ளது என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் ராமர் கோயிலில், 9 அடி உயரத்தில் ராமர் சிலை நிறுவப்பட உள்ளது என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

நீண்டகால சட்டப்போராட்டத்துக்குப்பின், 2019, நவம்பர் 9ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில்கட்ட வழி பிறந்தது. இதையடுத்து, 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை நடத்தப்பட்டது.

இந்நிலையில் ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

சிவ லிங்கத்தில் விரிசல்! ஜோஷிமத் நிலச்சரிவின் எதிரொலி!

கடந்த 1949ம் ஆண்டு டிசம்பர் 22 மற்றும் 23ம் தேதி இரவு பாபர் மசூதியில் இருந்த ராமர் சிலை திடீரென மாயமானது. கடந்த 70 ஆண்டுகளாகப் போராடுகிறோம், புதிதாக ராமர் சிலையை நிறுவ முடியவில்லை. 
அனைத்து மடாதிபதிகள், சாதுக்குள், சீர்களுடன் ஆலோசனை நடத்தி புதிதாக ராமர் சிலையை வடிவமைக்க உள்ளோம். இதற்காக கர்நாடகா, ஒடிசா மற்றும் மகாராஷ்டிராவில் கற்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன

புதிய ராமர் கோயிலில் 9 அடி உயரத்தில் ராமர் சிலையை நிர்மாணிக்க இருக்கிறோம். சூரிய ஒளிக் கதிர்கள் ராமர் தலையைத் தொடும் வகையில் வடிவமைக்க இருக்கிறோம். இதற்காக சிஐஎஸ்ஆர், சிபிஆர்ஐ, மத்திய வானியியல் மற்றும் வான் இயற்பியல் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறோம். அவர்கள் ஆலோசனைப்படி சூரியக் கதிர்கள் ராமர் தலையில் படும்படி சிலை வடிவமைக்கப்படும். 

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக உயர்த்த பாரத் ஜோடோ யாத்திரை நடத்தவில்லை: காங்கிரஸ் திட்டவட்டம்

ராமர் சிலை குறித்த தோற்றம், எத்தகைய உணர்ச்சிகளை சிலை வெளிப்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யவில்லை. ஸ்ரீ ராம ஜென்மபூகி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், ஒடிசாவைச் சேர்ந்த சிற்பிகள் சுதர்ஷந் சாகு, வாசுதேவ் காமத்,  கர்நாடகாவைச் சேர்ந்த கேகேவி மணியா, புனேவைச் சேர்ந்த  சத்ரயாக துலேகர் ஆகியோருடன் ஆலோசன நடத்தியுள்ளோம்.

2024ம் ஆண்டு மகரசங்கராந்தியன்று ராமர் கோயிலில் புதிதாக ராமர் சிலை திட்டமிட்டபடி நிறுவப்படும். 2023ம் ஆண்டு இறுதிக்குள் ராமர் கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்
இவ்வாறு சம்பத் ராய் தெரிவித்தார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட்வான்டேஜ் எடுக்கும் ஸ்பைஸ்ஜெட்.. தினமும் 100 கூடுதல் விமானங்கள்.. திணறும் இண்டிகோ!
இந்தியர்களுக்கு நிம்மதி.. இண்டிகோவுக்கு செக்! புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்