பணத் தட்டுப்பாடு எப்போது நீங்கும்? ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது….

Asianet News Tamil  
Published : Jan 14, 2017, 08:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
பணத் தட்டுப்பாடு எப்போது நீங்கும்? ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது….

சுருக்கம்

பணத் தட்டுப்பாடு எப்போது நீங்கும்? ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது….

500 மற்றும் 1000 ருபாய்  நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி அறிவிக்கப்பட்டது. நாட்டில் உள்ள பண புழக்கத்தில் 86 சதவீதம் இந்த நோட்டுகளே இருந்தன. இவ்வளவு நோட்டுகளையும் ஒரே நேரத்தில் செல்லாது என அறிவித்த அதே நேரத்தில், அதற்கு ஈடாக புதிய 2 ஆயிரம்,500 ருபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படவில்லை. 100 ரூபாய் நோட்டும் போதுமான அளவுக்கு புழக்கத்தில் இல்லை.

இதனையடுத்து  பண தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். பொது மக்கள் ரிசர்வ் வங்கி அனுமதித்த 2000 ரூபாயை ஏடிபம் களில் இருந்து எடுக்கவே கால்கடுக்க நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தற்போது நாள்தோறும் ரூ.4,500 வரை எடுக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் இன்றும் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை.

ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டு 60 நாட்கள் ஆகி விட்ட நிலையில் இன்னும் பல இடங்களில் ஏடி.எம்.களிலும், வங்கிகளிலும் மக்கள் நீண்ட கியூவில் நிற்கும் நிலையே நிலவுகிறது.

ஆரம்பத்தில் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மூடி இருந்த நிலையில் தறபோது ஓரளவு ஏ.டி.எம்.கள் இயங்குகின்றன. எனவே, எப்படியாவது பணம் கிடைத்து விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் நிலைமை முற்றிலும் சீராகி விடும் என்று ரிசர்வ்  வங்கி அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 2 லட்சத்து 24 ஆயிரம் ஏ.டி.எம்.கள் உள்ளன. பணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து ரூபாய் நோட்டுகள் இல்லாததால் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ஏ.டி.எம்.கள் மட்டுமே இயங்கி வந்தன.

தற்போது ரிசர்வ் வங்கியில் இருந்து அதிக அளவில் பணம் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் தற்போது 1 லட்சத்து 10 ஆயிரம் ஏ.டி.எம்.கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

வழக்கமாக ஏ.டி.எம்.களுக்கு நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் அனுப்பப்படும். ஆனால், கடந்த 2 மாதமாக ஏ.டி.எம்.களுக்கு 2 ஆயிரம் கோடியில் இருந்து 3 ஆயிரம் கோடி வரை மட்டுமே அனுப்பப்பட்டு வந்தது.

தற்போது ரூ.9 ஆயிரம் கோடி வரை அனுப்பப்பட்டு வருவதால் பிப்ரவரி மாதத்தில் முற்றிலும் பணத் தட்டுப்பாடு நீங்கிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு.. ராகுல் காந்தி பேச்சு.. கொந்தளித்த அமித்ஷா, ராஜ்நாத் சிங்.. பரபரப்பு!
Union Budget 2026: திருந்தாத மத்திய அரசு..பாஜகவை விளாசிய ராகுல் காந்தி.. நிர்மலா சீதாராமன் பதிலடி!