ராணுவ வீடியோஎதிரொலி...புகார்பெட்டி வைக்க உத்தரவிட்டார் தலைமை தளபதி

First Published Jan 13, 2017, 10:00 PM IST
Highlights

ராணுவ வீரர்கள் பலர் தங்களின் அளிக்கப்படும் உணவு, வசதிகள் குறித்து சமூக ஊடகங்களில் குறைகூறியதைத் தொடர்ந்து,  அதிகாரிகள் மீதான புகார்களையும், குறைகளையும் தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் அறிவித்துள்ளார்.

எல்லைப் பாதுகாப்பு படை வீரர், சிஆர்பிஎப் வீரரைத் தொடர்ந்து, ராணுவத்தில் உள்ள படை வீரர்கள் அதிகாரிகளுக்கு உதவியாளர்களாக பணி செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் சில நாட்களுக்கு முன் ஜவான்கள் குறை கூறினர் இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதைத்தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதாவது:-

ராணுவ வீரர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் அல்லது தங்களது குறைகள் குறித்து நேரடியாகவோ கடிதம் மூலமாகவோ என்னிடம் தெரிவிக்கலாம்.

இதற்கா ஒவ்வொரு ராணுவ தலைமையகங்களில் கருத்துக்கள் மற்றும் குறைகளை தெரிவிப்பதற்காக பல இடங்களில் பெட்டி வைக்கப்படும். ராணுவ வீரர்கள் தங்கள் தகுதி மற்றும் சேவைக்கு குறைவாக எந்த ஒரு பிரச்சனையும் எதிர்கொண்டாலும் அவர்கள் அதை  புகார் பெட்டியில் குறைகளை எழுதிப்போடலாம். இது நேரடியாக என்னை வந்து சேரும். நான் பிரச்சனையை சரிசெய்கிறேன்.

புகார் தெரிவிக்கும் ராணுவ வீரர்கள் தங்களுடைய பெயரை புகாரில் தெரிவிக்க வேண்டும். எந்த நடவடிக்கை எடுக்கும் முன்பும், புகார் தெரிவிப்போரின் அடையாளத்தையும், பெயரையும் வெளியே தெரியவிடாமல் அழித்துவிடுவோம்.

வீரர்கள் நேரடியாக என்னிடம் குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மாறாக, சமூக ஊடகங்கள் மற்றவற்றில் தெரிவிக்க வேண்டாம். வீரர்கள் தங்களின் மூத்த அதிகாரிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்களின் குறைகள் புகார்கள் மிக விரைவாக களையப்படும். இந்த நடவடிக்கையில் திருப்தி இல்லை எனில் நாம் வேறு வழிகளை வேண்டுமானலும் தேர்வு செய்யலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்்தார்.

 

click me!