
புதுச்சேரியில், ஆளுநர் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தினவிழாவைத் வெகு சிறப்பாக தொடங்கிவைத்தார்.
புதுச்சேரி உப்பளம் விளையாட்டு மைதானத்தில் 68-வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
உப்பளம் மைதானம் வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டும், பெரும் மக்கள் கூட்டத்துடனும் காட்சியளித்தது.
மைதானத்திற்கு பலத்த பாதுகாப்புடன் வந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
பின்னர், ஆளுநர் கிரண்பேடி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த கம்பத்தின் அருகே வந்து தேசிய கொடியை ஏற்றி இந்திய தேசத்திற்கு தனது மரியாதையை செலுத்தினார்.
தேசிய கீதம் ஒலிக்கப்பட்டபொது, முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மக்கள் என அனைவரும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவின் முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.