நாட்டின் 69வது குடியரசு தினம்!! ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றினார்

 
Published : Jan 26, 2018, 10:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
நாட்டின் 69வது குடியரசு தினம்!! ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றினார்

சுருக்கம்

republic day of india president raised national flag

நாட்டின் 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்பாத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசிய கொடியேற்றினார்.

நாட்டின் 69வது குடியரசு தினம் நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜ்பாத்திற்கு குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முப்படை தளபதிகள் வரவேற்றனர். பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

அதன்பின்னர், காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்த விமானப்படை வீரர் ஜோதி பிரகாஷ் நிராலாவை கௌரவிக்கும் வகையில், அவரது மனைவிக்கு அசோக் சக்ரா விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

முதன்முறையாக இந்திய குடியரசுத் தின விழாவில் 10 நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர்.
 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!