
கடந்த சில மாதங்களுக்கு கோயில்களுக்குள் டி-சர்ட், ஜீன்ஸ், சுடிதார், லக்கின்ஸ் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர், நீதிமன்ற உத்தரவால், அந்த தடை தளர்த்தப்பட்டது.
அதேபோல் சில தனியார் கல்லூரிகளும், மேற்கண்ட உடைகளை மாணவ, மாணவிகள் அணிந்து வருவதற்கு தடை விதித்தது. இது இன்றும் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்துக்கு, ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து கொண்டு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோர்ட்டில் ஜீன்ஸ், டி-சர்ட் அணியலாமா, கூடாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தில், டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை நீதிபதி மஞ்சுளா மற்றும் ஜி.எஸ்.குல்கர்னி அமர்வு விசாரித்தனர். இந்த வழக்க தொடர்பான செய்தியை சேரிக்க பத்திரிகையாளர் சென்றார். அவர் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்திருந்தார். இதை பார்த்த நீதிபதி மஞ்சுளா, பத்திரிகையாளருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், பத்திரிக்கையாளர்கள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறினார். ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து வந்ததற்கு, நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதால் இனி கோர்ட்டில் ஜீன்ஸ், டி-சர்ட் அணிய தடை இருக்கிறதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.