
பி எஸ் 3 வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு , அவசர அவசரமாக தற்போது இருசக்கர வாகனங்களை டீலர்கள் மற்றும் ஷோ ரூமிலிருந்து விற்கும் பணி மும்முரம் அடைந்துள்ளது
காற்று மாசு படுவதை தடுக்க , மாசு கட்டுப்பாட்டு வாரியம் வாகனங்களை தரம் பிரித்து சில விதிகளை விதித்தது . அதன் படி , நாளை முதல் அதாவது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பி எஸ் 3 வாகனங்களை வாங்கவோ விற்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது
இதனால் இருப்பில் இருக்கக் கூடிய வாகனங்களை விற்க இன்று ஒரு நாளே கால அவகாசம் உள்ளதால், இருசக்கர வாகன விரும்பிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய வாகனங்களை குறைந்த விலைக்கு வாங்கி வருகின்றனர் .
இதன் காரணமாக அதிக பட்சமாக 22 ஆயிரம் ரூபாய் வரை வாகனத்தின் மீது தள்ளுபடி கிடைககிறது .
யாருக்கெல்லாம் இருசக்கர வாகனங்கள் இல்லையோ அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் . மேலும் இவ்வாறு வாங்கும் வாகனங்களை மீண்டும் விற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது .