GATE 2023 Response Sheet: கான்பூர் ஐஐடி நடத்திய கேட்-2023 தகுதித் தேர்வுக்கான வினா-விடைத் தாள் இன்று வெளியாக உள்ளது.
GATE 2023 Response Sheet கான்பூர் ஐஐடி நடத்திய கேட்-2023 தகுதித் தேர்வுக்கான வினா-விடைத் தாள் இன்று வெளியாக உள்ளது.
கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் கடந்த 4,5 மற்றும் 11 மற்றும் 12 தேதிகளில் தகுதித் தேர்வுகளை நடத்தியது. கேட் தகுதித் தேர்வு பல்வேறு பாடப்பிரிபுகளில் 29 தாளிகளில் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது.
இந்திய அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு... 3,167 காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?
இந்தத் தேர்வில் 6.80 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்து தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான வினா-விடைத் தாள் சரிபார்ப்பு(ரெஸ்பான்ஸ் ஷீட்) இன்று(பிப்ரவரி15) வெளியிடப்படுகிறது.
எப்படி சரிபார்க்கலாம்
கேட் தகுதித் தேர்வு எழுதியவர்கள், gate.iitk.ac.in. என்ற இணையதளத்தில் சென்று தங்கள் விடைகளைச் சரிபார்க்கலாம். தேர்வு எழுதியவரின் தனிப்பட்ட எண்ணுக்கு “ரெஸ்பான்ஸ் ஷீட்” வெளியிடப்படும் தங்களின் தேர்வு எண் அல்லது மின்அஞ்சல் மூலம் லாகின் செய்து மாணவர்கள் விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம்.
ஆனால், கேட் தேர்வுக்கான “ஆன்சர்-கீ” வரும் 22ம் தேதி வெளியிடப்படும், விடை மதிப்பீட்டில் ஏதேனும் தவறு இருந்தால், மாணவர்கள் தங்கள் மேல்முறையீட்டை பிப்ரவரி 22 முதல் 25க்குள் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்
ஆன்சர் கீஸ் மற்றும் மாணவர்களின் பதில் ஆகியவற்றைப் பொறுத்து கேட்2023 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். கேட் தேர்வு முடிவுகள் மார்ச் 16ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், பொறியியல் பட்டதாரிக்கான திறன் தேர்வில் தேர்வானவர்கள்(ஜிஏபி) பல்வேறு தொழில்நுட்ப, பொறியியல், கட்டிடக்கலை, அறிவியல், வணிகம் மற்றும் கலைக் கல்லூரிகளில் சேர முடியும்.
Senthil Sankar: பாராட்டுகளைவிட பிரதமர் அளித்த அங்கீகாரம்தான் பெருசு! செந்தல் சங்கர் பிரத்யேக பேட்டி
கவனத்தில் கொள்க
மாணவர்கள் எவ்வாறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்கள் என்பதைப் பொறுத்து “ரெஸ்பான்ஸ்ட் ஷீட்” இருக்கும். கேட் தேர்வு பதில் தாள் மாணவர்களால் நிரப்பப்பட்ட பதில்களைக் கொண்டிருக்கும். “ரெஸ்பான்ஸ் ஷீட்” அல்லது “ஆன்ஸர் கீ” ஆகியவை இறுதியான தேர்வு முடிவு அல்ல என்பதை தேர்வு எழுதியவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். கேட் தேர்வில் எந்த அளவு மதிப்பெண்களை பெற முடியும் என்பதற்கான மதிப்பீட்டு அளவுகோல் என்பது குறிப்பிடத்தக்கது.