
New NCERT textbooks : 7ஆம் வகுப்பு NCERT பாட புத்தகங்களிலிருந்து டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள் பற்றிய குறிப்புகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன. அதோடு, புதிய குறிப்புகளான மகா கும்பமேளா, மேக் இன் இந்தியா மற்றும் பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து NCERT அதிகாரிகளிடம் கேட்ட போது இது முதல் பாகம் தான், 2ஆம் பாகம் பாகத்தில் அந்த குறிப்புகள் இடம் பெறும் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.
இதற்கு முன்னதாக கடந்த 2022-23 ஆம் ஆண்டில் கல்ஜி, துக்ளக், முகலாய பேரரசர்களின் சாதனைகள் பற்றிய குறிப்புகளை குறைத்திருந்த நிலையில் தற்போது அந்த குறிப்புகளை முற்றிலுமாக நீக்கியுள்ளது. மேலு, புதிய NCERT பாட புத்தகத்தில் மகா கும்பமேளா, புனித புவியியல், இந்திய வம்சங்கள், பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ, மேக் இன் இந்தியா போன்ற குறிப்புகள் புதிதாக இடம் பெற்றுள்ளன. இந்த பாட குறிப்புகள் அனைத்தும் தேசியா கல்விக் கொள்கை மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு தரவுகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.