
போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு தண்டனை விதித்த மேற்கு வங்க விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை கொல்கத்தா உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மார்பகங்களை தொட முயற்சிப்பது "மோசமான பாலியல் வன்கொடுமை" மட்டுமே, அது "வன்புணர்வு முயற்சி" அல்ல என்றும் கூறியுள்ளது.
விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை "மோசமான பாலியல் வன்கொடுமை" மற்றும் "வன்புணர்வு முயற்சி" ஆகிய இரண்டிலும் குற்றவாளி எனக் கண்டறிந்து, அவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது. இத்தீர்ப்பு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
32,438 ரயில்வே குரூப் D பணிக்கு 1.08 கோடி பேர் விண்ணப்பம்!
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அரிஜித் பானர்ஜி மற்றும் நீதிபதி பிஸ்வரூப் சவுத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கில் பாதிக்கப்பட்டவரின் மருத்துவ பரிசோதனையில் எந்தவிதமான பாலியல் வன்புணர்வோ, வன்புணர்வு முயற்சியோ நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மதுபோதையில் அவரது மார்பகங்களைத் தொட முயன்றிருக்கிறார். இது 2012 போக்சோ சட்டத்தின் பிரிவு 10 இன் கீழ் மோசமான பாலியல் வன்கொடுமை குற்றம் ஆகும். ஆனால் பாலியல் வன்புணர்வு என்ற குற்றத்தின் கீழ் வராது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இறுதி விசாரணைக்குப் பிறகு, "மோசமான பாலியல் வன்கொடுமை" என்ற குற்றச்சாட்டின் கீழ் மட்டும் தண்டனை வழங்கலாம் என்றும் அதன்படி குற்றவாளிக்கான சிறை தண்டனை 5 முதல் 7 ஆண்டுகள் வரை எனக் குறைக்கப்படும் என்றும் தெரிவித்தது.
இந்த குறிப்பிட்ட வழக்கில், குற்றவாளி ஏற்கனவே 28 மாதங்கள் சிறையில் கழித்துள்ளார். மேல்முறையீடு முடிவடையும் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை, எது முதலில் வருகிறதோ அதுவரை, தண்டனை மற்றும் தண்டனை உத்தரவின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீட்டு வழக்கு முடிவடையும் வரை அபராதம் செலுத்துவதும் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது.
அதே நேரத்தில், மேல்முறையீட்டு விசாரணையில் ஏற்கெனவே முன்வைத்த அவதானிப்புகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க பயங்கரவாதிகள் முயற்சி: பிரதமர் மோடி