திருவனந்தபுரத்தில் காலராவுக்கு ஒருவர் பலி; 8 ஆண்டுகளில் காலராவுக்கு முதல் உயிரிழப்பு!

Published : Apr 27, 2025, 05:06 PM IST
திருவனந்தபுரத்தில் காலராவுக்கு ஒருவர் பலி; 8 ஆண்டுகளில் காலராவுக்கு முதல் உயிரிழப்பு!

சுருக்கம்

Cholera Death News in Trivandrum : கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் காலராவுக்கு ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலியானவரது உறவினர் அல்லது அப்பகுதியில் வேறு ஏதும் காலரா பாதிப்பு ஏற்படவில்லை.

Cholera Death News in Trivandrum : கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் காலராவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். கௌடியாரைச் சேர்ந்த முன்னாள் வேளாண் துறை அதிகாரி ஒருவர் காலராவுக்கு பலியானார். இறந்த பின்னர் எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அவருக்கு காலரா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த 20ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்தார். மேலும் உயிரிழந்தவரது உறவினர்களுக்கோ அப்பகுதியிலோ வேறு யாருக்கேனும் காலரா பாதிப்பு ஏற்படவில்லை.

மிகப்பெரிய அவமானம் இது; பஹல்காம் தாக்குதல் குறித்து ட்வீட் போட்ட ஷாருக்கானை வறுத்தெடுத்த பிரபலம்

இதனால் கவலைப்படத் தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காய்ச்சல் காரணமாக கடந்த 17 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு ஓரிரு நாட்களில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளா தனது முதல் காலரா மரணத்தைப் பதிவு செய்கிறது. திருவனந்தபுரத்தின் கௌடியாரைச் சேர்ந்த 63 வயது முதியவர். ஏப்ரல் 20 அன்று காலரா இறப்பு உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளில் காலரா தொடர்பான முதல் மரணம் இதுவாகும் என்று தகவல் தெரிவிக்கின்றது.

மார்பகங்களைத் தொட முயல்வது 'வன்புணர்வு முயற்சி' அல்ல: உயர் நீதிமன்றம்
 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!