பஹல்காமில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடிய நிஜ ஹீரோ!

Published : Apr 24, 2025, 10:40 AM ISTUpdated : Apr 24, 2025, 10:44 AM IST
பஹல்காமில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடிய நிஜ ஹீரோ!

சுருக்கம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற முயன்ற சையத் அடில் ஹுசைன் ஷா உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட முதல்வர் உமர் அப்துல்லா, ஹுசைனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து அரசாங்கத்தின் முழு ஆதரவையும் அளிப்பதாக உறுதியளித்தார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட குதிரை சவாரி வீரரின் இறுதிச் சடங்கில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா புதன்கிழமை கலந்துகொண்டார்.

பயங்கரவாதிகளின் தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற முயன்ற சையத் அடில் ஹுசைன் ஷா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட முதல்வர் உமர் அப்துல்லா, ஹுசைன் ஷாவின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து, அவர்களுக்கு அனைத்து ஆதரவையும் அளிப்பதாக உறுதியளித்தார்.

துப்பாக்கியைப் பறிக்க முயன்றார்:

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஹபட்னரில் ஹுசைனின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, "இந்த தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த கோழைத்தனமான தாக்குதலில் ஒரு ஏழை உள்ளூர் தொழிலாளி உயிரிழந்துள்ளார். அவர் துணிச்சலானவர். சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற முயன்றபோது இறந்திருக்கிறார். அவர் பயங்கரவாதிகளில் ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகக்கூடக் கேள்விப்பட்டேன். அப்போதுதான் அவர் சுடப்பட்டிருக்கிறார்" என்று கூறினார்.

ஹுசைனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் உமர் அப்துல்லா அரசாங்கத்தின் முழு ஆதரவையும் அளிப்பதாகத் தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதல்: இந்தியா அதிரடி நடவடிக்கை – சிந்து நீர் ஒப்பந்தம் நிறுத்தம், அட்டாரி எல்லை மூடல்!

உள்ளுரைச் சேர்ந்த ஒரே நபர்:

பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களில் உள்ளூரைச் சேர்ந்த ஒரே நபர் சையத் அடில் உசேன். காஷ்மீரில் பஹல்காமில் உள்ள பிரபலமான பைசரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர். செவ்வாய்க்கிழமை இந்தத் துயரச் சம்பவம் சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தாக்குதலில் குறைந்தது 5–6 பயங்கரவாதிகள் ஈடுபட்டனர் என்றும் குர்தா-பைஜாமாக்களை அணிந்து, பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள அடர்ந்த பைன் காட்டில் இருந்து பைசரன் புல்வெளிக்கு வந்து AK-47 துப்பாக்கிகளால் சுட்டதாகவும் நேரில் பார்த்தவர்களின் சாட்சியம் மூலம் தெரியவந்திருக்கிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பிரிவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளின் வரைபடங்களை வெளியிட்டது NIA

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!