கர்ப்பிணி பெண்கள் ராமாயணம் படியுங்கள்! தெலுங்கானா ஆளுநர் தமிழசை அறிவுரை

By SG Balan  |  First Published Jun 12, 2023, 8:43 AM IST

ஆர்.எஸ்.எஸ். சம்வர்த்தினி நியாஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கர்ப்பிணிப் பெண்கள் ராமாயணம் படிக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.


கர்ப்பிணி பெண்கள் ராமாயணம் போன்ற இதிகாசங்களை கண்டிப்பாக படிக்கவேண்டும் எனவும் அதை வாசிப்பதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும் எனவும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். சம்வர்த்தினி நியாஸ் அமைப்பின் சார்பில் காணொளி காட்சி வாயிலாக நடந்த நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் இவ்வாறு பேசியுள்ளார்.

மகப்பேறு மருத்துவரான தமிழிசை, "கர்ப்ப காலத்தில் சுந்தர காண்டம் படிப்பது கருவில் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் நல்லது" நிகழ்ச்சியில் 'கர்ப்ப சன்ஸ்கார்' திட்டத்தை தொடங்கி வைத்த தமிழிசை, இத்திட்டத்தை உருவாக்குவதில் சன்வர்தினி நியாஸின் முயற்சிகளைப் பாராட்டி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், "கர்ப்பத்தைப் பற்றி அறிவியல்பூர்வமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது நிச்சயமாக நேர்மறையான முடிவுகளைத் தரும்" என்றார்.

Tap to resize

Latest Videos

அமெரிக்கா செல்லும் பிரதமர்! நியூ ஜெர்சி உணவகத்தில் 'மோடி ஜி' பெயரில் இந்திய உணவு ரெடி!

"கிராமப்புறங்களில் கருவுற்றிருக்கும் பெண்கள் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படிப்பதைப் பார்த்திருப்போம். குறிப்பாக தமிழ்நாட்டில், கர்ப்பிணிப் பெண்கள் கம்ப ராமாயணத்தின் சுந்தர காண்டத்தைப் படிக்கும் வழக்கம் உள்ளது. கர்ப்ப காலத்தில் சுந்தர காண்டம் படிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது" என தமிழிசை தெரிவித்தார்.

மேலும், "அறிவியல் அணுகுமுறை கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க உதவும். ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவும். கருவுற்றிருக்கும்போது யோகா பயிற்சி செய்வதால் தாய் சேய் இருவரின் உடல் மற்றும் மன நலனைப் பேணலாம். அது சுக பிரசவத்திற்கும் உதவும்" என்றார்.

மகாராஜா கல்லூரி மதிப்பெண் பட்டியல் சர்ச்சை: ஏசியாநெட் நியூஸ் நிருபர் மீது வழக்கு.. CPI ஆதரவு !!

தொடர்ந்து பேசிய தமிழசை தாய்மையின் சிறப்பையும், 'கர்ப்ப சன்ஸ்கார்' திட்டத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ராஷ்டிர சேவிகா சமிதியின் இணை தலைவர் லீனா கஹானே பேசும்போது, பகவத் கீதை போன்ற மத நூல்களையும் சமஸ்கிருத மந்திரங்களையும் படிக்க வேண்டும்; யோகா பயிற்சி செய்யவேண்டும் எனப் பேசினார்.

click me!