
இந்தியாவில் இதுவரை அதிக மதிப்புள்ளதாக ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்து வந்த நிலையில், தற்போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிட்டு வருகிறது. ஒரு ரூபாய் நோட்டுகள் முதல் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு உள்ளது. 50 பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் உள்ள நிலையில், அதற்கு குறைவான நாணயங்கள் புழக்கத்தில் இல்லை.
அதேபோல், ரூபாய் நோட்டுகளின் மதிப்பை அதிகப்படுத்தும் வகையில் தற்போது, ரிசர்வ் வங்கி இரண்டாயிரம் ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் புழக்கத்தில் விடப்படும் என்றும் கூறப்படுகிறது.