
புனேவில் ரேய்சோனி பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் இருவர் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவரை அடுத்தடுத்த நாட்களில் பாலியல் பாலாத்கரம் செய்துள்ளனர் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி கடந்த அக்டோர் 18 ஆம் தேதி அன்று தேர்வு முடித்துவிட்டு மதியம் விடுதிக்கு செல்லும்
வழியில் அவரை, மூன்றாம் ஆண்டு மாணவர் கரண் கஜ் வழிமறித்து ப்ராஜக்டை சமர்பிக்க உதவி செய்யும்படி கேட்டுள்ளார்.
அதற்கு மாணவி, உதவி செய்வதாக கூறியுள்ளார். பிராஜக்ட் சம்பந்தபட்ட குறிப்புகள் விடுதியில் உள்ளதாகவும், விடுதிக்கு வருமாறும் மாணவியை கேட்டுள்ளார். அதற்கு சம்மத்தித்து விடுதி சென்ற மாணவியை கரண் கஜ் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அது மட்டுமல்லாமல் அந்த மாணவியிடம் போலீசுக்கு போக வேண்டாம் எனவும் மிரட்டியுள்ளார்.
முதலாம் ஆண்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை, கரண் கஜ் சக மாணவர் மகேஷிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம், நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று கூறி, அருகில் உள்ள மற்றொரு கட்டடத்திற்கு வர சொல்லி மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால், அங்கு சென்ற அந்த பெண்ணுக்கோ கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. மகேஷூம் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு பல்வேறு செல்போன் எண்களில் இருந்து ஆபாச மேசேஜ்கள் வந்துள்ளது.
இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தன் சகோதரியுடன் புனே காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை, கரண் கஜ், மகேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும், ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய மூன்று மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.