டோல்கேட்டை சூறையாடிய கும்பல்... கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் விபரீதம்...

First Published Oct 23, 2016, 5:54 AM IST
Highlights


டோல்கேட்டுகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் அதிக அளவு இருப்பதாக கூறி, கட்டணம் வசூலிப்பவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பல்வேறு இடங்களில் தகராறு நிகழ்ந்து வருகிறது. சோதனை சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து மத்திய அரசும் திருத்தப்பட்ட கட்டணத்தை ஒவ்வொரு வருடம் ஏப்ரல் மாதம் அளித்து வருகிறது. 

ஆனாலும், பல்வேறு டோல்கேட்களில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

சில இடங்களில் சோதனை சாவடி ஊழியர்களுக்கு, வாகன ஓட்டிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது. இதேபோல் உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் சோதனைச் சாவடி ஒன்றை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அடித்து நோறுக்கி உள்ளது.

சோதனை சாவடியில் சிலர் கட்டணம் செலுத்துவது தொடர்பாக அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஊழியர்களை தாக்கியுள்ளனர். மேலும், சோதனை சாவடியில் இருந்த கம்ப்யூட்டர்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!