
அடுத்த ஆண்டில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பணி தொடங்கப்படும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சுப்பிரமணிய சுவாமி கூறியதாவது:-
அயோத்தியான ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோவில் கட்டவேண்டும். மசூதியை சார்யூ நதியின் மறுமுனையில் கட்ட வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் எனது மனு மீதான விசரணையில், அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 25கீழ் ராமர் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரினேன். ஆனாலும், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வழிபாடு நடத்துவது கடினமானது.
ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை அங்கு அமலில் உள்ள அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்க வேண்டும். இந்த சட்டம் அமல்படுத்தியபோது, தற்காலிகமாகத்தான் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே, அரசியல் சாசனப்பிரிவு 370ன் படி காஷ்மீரில் இருந்து நீக்குவது பெரிய விஷயம் இல்லை. இதற்கு நாடாளுமன்ற ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. அப்படி ஒரு ஒப்புதலும் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.