
சுப்ரீம் கோர்ட் பலமுறை உத்தரவிட்டும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலையில் உள்ளோம் என்று முதல்-அமைச்சர் சித்தராமையா கூறினார்.
சாம்ராஜ்நகர் டவுனில் புதிதாக கட்டப்பட்டு உள்ள தனியார் மருத்துவமனையை கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கடந்த 4 ஆண்டுகளில் எனது தலைமையிலான அரசு சிறப்பான நிர்வாகத்தை கொடுத்து உள்ளது என சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் என்று கூறியுள்ளது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பலமுறை உத்தரவிட்டுள்ளது.
ஆனால், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இதுவரை தண்ணீர் திறந்துவிட முடியாத சூழ்நிலையில் உள்ளது. ஏனெனில் நம்மிடம் அவர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு தண்ணீர் இல்லை. நாட்டின் உயர்ந்த கோர்ட் உத்தரவிட்டும் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாத சூழ்நிலையில் நாம் உள்ளோம் என அவர் கூறினார்.