
மத்தியப்பிரதேசத்தில் பசுவை வெட்டியதாகக் கூறி, பசு பாதுகாப்புக் குழுவினர் இளைஞரை கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவம் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜயினி பகுதியில் இளைஞர் ஒருவர் பசுவை வெட்டிக் கொன்றதாக அவர் மீது கவ் ரக்ஷாஸ் எனப்படும் பசு பாதுகாப்புக் குழுவினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த கொடுரத் தாக்குதல் சம்பவம் செல்போனில் வீடியோவாக எடுக்கப்பட்டு ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப் மூலம் வைரலாகியுள்ளது.
இந்த அதிர்ச்சிகரமான தாக்குதல் சம்பவம் குறித்து உஜ்ஜயினி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்களில் நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.
அண்மையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பேஹ்லு கான் என்பவர் பசுவைக் கொன்றதாகக் கூறி, பசு பாதுகாப்புக் குழுவினர் தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.