
Ram Charan Wife Upasana Way to Prayagraj : உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா தன்னுடைய சகோதரி மற்றும் ஃப்ரண்ட்ஸ் ஆகியோருடன் தனி விமானத்தில் பிரயக்ராஜ் சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உபாசனா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டோஸ் பதிவிட்டு அதில் 3 லட்டுக்கள் என்று கேப்ஷன் கொடுத்திருக்காங்க. அவர் பதிவிட்ட போட்டோவில் அவர்கள் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருக்கிறார்கள்.
மகா கும்பமேளா 2025ல் மனைவியுடன் புனித நீராடிய முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்!
அடுத்த போட்டோல உபாசனா தன்னோட சகோதரி, ஃப்ரெண்ட்ஸ் கூட பிரைவேட் ஜெட் முன்னாடி போஸ் கொடுத்துட்டு, "ஆசிர்வதிக்கப்பட்ட & உறைஞ்சு போன"னு கேப்ஷன் கொடுத்திருக்காங்க. மகா கும்பமேளாவுல கங்கை அழகான வீடியோவையும் ஷேர் பண்ணியிருக்காங்க.
தன்னுடைய கணவர் இல்லாமல் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவிற்கு உபாசனா சென்றுள்ளார். ராம் சரண் இப்போது புச்சி பாபு சனா படத்தில் நடித்தி வருகிறார். கடைசியாக கேம் சேஞ்சர் படத்தில் நடித்திருந்தார். கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியானது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரூ.425 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் ரூ.178 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு தான் இப்போது ராம் சரண் தன்னுடைய 16ஆவது படத்தில் நடித்து வருகிறார்.