அண்மையில் சீனாவில் நடத்த ஆசிய விளையாட்டு போட்டிகளில், 100க்கும் அதிகமான பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தனர் இந்திய வீரர் வீராங்கனைகள். நாடு திரும்பிய அந்த வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற ராம் பாபூவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். ராமுக்கு விருப்பமான காரை அவர் எடுத்துக்கொள்ளலாம் என்றும், அவர் ஆதரவு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மூலம் (MGNREGA) தினசரி கூலியிலிருந்து, இன்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பாபூவின் பயணத்திற்கு தனது பாராட்டுகளைத்தெரிவித்துள்ளார்.
யார் இந்த ராம் பாபூ?
ராம் பாபு, உத்தர பிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டத்தை சேர்ந்தவர், இவருடைய தந்தை ஒரு கூலித் தொழிலாளியாவார். தந்தையைப் போலவே இவரும் ஒரு கூலித் தொழிலாளியாக தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். பாபுவிற்கு மூன்று சகோதரிகள் உண்டு, மாதம் 3000 ரூபாய் முதல் 3500 மட்டுமே ஈட்டக்கூடிய மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்த ராம் பாபு, தனது தடகள கனவை நிறைவேற்ற பல ஹோட்டல்களில் சர்வராகவும் பணி செய்துள்ளார்.
வேலை பறிக்கப்பட்ட ஆத்திரத்தில் கடைக்குத் தீ வைத்து பழி தீர்த்த இளைஞர்!
அதன் பிறகு தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் வழியாக வேலைகளைப் பெற்று தனது குடும்பத்தை கஷ்டப்பட்டு நடத்தி வந்துள்ளார். குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் MGNREGA மூலம் கிடைத்த வேலை தான் இவருக்கு பிரதானமான ஒன்றாக இருந்து வந்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தனது வாழ்க்கையை குறித்து பேசிய ராம்பாபு தன்னால் இயன்ற அனைத்து வேலைகளையும் தான் செய்ததாகவும், வாரணாசியில் வெயிட்டராக பணிபுரிந்ததாகவும், அதன் பிறகு தான் மகாத்மா காந்தி திட்டத்தில் இணைந்து பணி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த பணியில் இருந்த பொழுது தான் தன்னால் தடகள போட்டிகளில் கலந்து கொள்ள முடிந்தது என்றும், இந்தியாவிற்காக ஒரு வெண்கல பதக்கத்தை பெற்றது பெருமை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இக்கட்டான குடும்ப சூழ்நிலையில் இருந்து வந்த பொழுதும், தன்னுடைய கனவை நிறைவேற்றிய ராம் பாபு தற்போது பலருக்கு மாபெரும் ரோல் மாடலாக விளங்கி வருகிறார் என்றால் அது நிச்சயம் மிகையல்ல என்று தான் கூற வேண்டும்.
1 நிமிடத்திற்கு 250 பிரியாணிகள்.. உலகக் கோப்பை போட்டியின் போது சுவாரஷ்யம்.. ஸ்விக்கி தகவல்