rajya sabha election results 2022: மாநிலங்களவைத் தேர்தல்: 4 மாநில வெற்றி வேட்பாளர்கள் பட்டியல்: முழு விவரம்

Published : Jun 11, 2022, 08:59 AM ISTUpdated : Jun 11, 2022, 09:21 AM IST
rajya sabha election results 2022: மாநிலங்களவைத் தேர்தல்: 4 மாநில வெற்றி  வேட்பாளர்கள் பட்டியல்: முழு விவரம்

சுருக்கம்

rajya sabha election results 2022 :மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடந்த 16 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய 4 மாநிலங்களில் நடந்த 16 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மொத்தம் 16 இடங்களுக்கு நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக 8இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 5 இடங்களையும், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சுயேட்சை தலா ஒரு இடத்தையும் வென்றனர். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 இடங்களுக்கு நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது. சிவசேனா ஒரு இடத்திலும் தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றது.

ஹரியானா மாநிலத்தில் 2 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் இரண்டிலுமே பாஜக வென்றது. காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டும் அவர் தோல்வி அடைந்தார்.

கர்நாடக மாநிலத்தில் 4 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பாஜக 3 இடங்களில் வென்றது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை கைப்பற்றியது. மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் கட்சிமாறி வாக்களித்ததால், அந்தக் கட்சியும் தோற்றது, காங்கிரஸும் தோற்றது, பாஜக வென்றது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 4 இடங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3இடங்களைக் கைப்பற்றியது, பாஜகஒரு இடத்தில் மட்டும் வென்றது.


 

மகாராஷ்டிரா

1.    பியூஷ் கோயல்- பாஜக
2.    அனில் போண்டே- பாஜக
3.    தனஞ்செய் மகாதிக்- பாஜக
4.    பிரபுல் படேல் –தேசியவாத காங்கிரஸ்
5.    சஞ்சய் ராவத்- சிவசேனா
6.    இம்ரான் பிரதாப்கார்கி- காங்கிரஸ்

ராஜஸ்தான் வெற்றி வேட்பாளர்கள்

1.    முகுல் வாஸ்னிக்- காங்கிரஸ்
2.    ரன்தீப் சிங் சுர்ஜேவாலா- காங்கிரஸ்
3.    பிரமோத் திவாரி- காங்கிரஸ்
4.    ஹன்யாசம் திவாரி- பாஜக

கர்நாடக வெற்றி வேட்பாளர்கள்

1.    நிர்மலா சீதாராமன்- பாஜக
2.    ஜெக்கேஷ்- பாஜக
3.    லஹார் சிங்- பாஜக
4.    ஜெய்ராம் ரமேஷ் – காங்கிரஸ்

ஹரியாணா வெற்றி வேட்பாளர்கள்
1.கார்த்திகேய ஷர்மா- சுயேட்சை
2. கிருஷ்ணன் லால் பன்வார்-  பாஜக

PREV
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!