rajya sabha election 2022 results: மாநிலங்களவைத் தேர்தல் : பாஜக 8 இடங்களில் வெற்றி: காங்கிரஸ் 5 இடங்கள்

By Pothy RajFirst Published Jun 11, 2022, 8:33 AM IST
Highlights

rajya sabha election 2022 results: மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் 16 இடங்களுக்கு நடந்த மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை அதிகாலையில்தான் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் 16 இடங்களுக்கு நடந்த மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை அதிகாலையில்தான் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பாஜக 8 இடங்கள்

அதில் மொத்தம் 16 இடங்களில் பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் கிடைத்தன.
இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் பாஜக ஒரு இடத்திலும் வென்றது. கர்நாடக மாநிலத்தில் கட்சி மாறி எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதனால், பாஜக 3 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வென்றது.

ஹரியானா மாநிலத்தில் பாஜக ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்து அவரும் வென்றார். காங்கிரஸ் கட்சியால் ஹரியானாவில் ஒரு இடத்தில்கூட வெல்ல முடியவில்லை. 

மகாவிகாஸ் அகாதிக்கு அடி

மகாராஷ்டிரா மாநிலத்தில் மகாவிகாஸ் அகாதிக்கு பெரிய அடி விழுந்தது. 6 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது. இந்த 3 இடங்களுக்கான முடிவுகளை அறிவிப்பதில் 8 மணிநேரம் தாமதம் ஏற்பட்டது, வாக்கு எண்ணுவதில் சிக்கல், புகார்கள் ஆகியவற்றைக் கடந்து அதிகாலையில் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்றுமாலை 5மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கதிட்டமிடப்பட்டு,  அதிகாலை ஒரு மணிக்குதான் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மகாவிகாஸ் அகாதி எம்எல்ஏக்கள் 3 பேர் விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக பாஜக புகார் அளித்ததையடுத்து வாக்கு எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த விசாரணையின் முடிவில் சிவசேனா எம்எல்ஏ சுஹால் கண்டேவின் வாக்கை நிராகரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

ஹரியானாவிலும் இன்று அதிகாலையில்தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது பல்வேறு புகார்களை பாஜக கூறியது. இதையடுத்து இரு எம்எல்ஏக்கள் வாக்கை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
ஹரியானாவில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அஜெய் மக்கான் தோல்வி அடைந்தார். பாஜக சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணன் லால் பன்வார், சுயேட்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அமைச்சர்  பியூஸ் கோயல்

மகாராஷ்டிராவில் 6 இடங்களில் பாஜக 3 இடங்களில் வென்றது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அனில் போண்டே, தனஞ்செய் மகாதிக் ஆகியோர் வெற்றி பெற்றனர். மகாவிகாஸ்அகாதி கூட்டணியான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தலா ஒரு இடம் கிடைத்தது. சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத், காங்கிரஸ் சார்பில் இம்ரான்  பிரதாப்கார்கி, என்சிபி சார்பில் பிரபுல் படேல் ஆகியோர் வெற்றி பெற்றனர். 

காங்கிரஸ் வாகை

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும், பாஜக ஒரு இடத்தையும் பிடித்தன. காங்கிரஸ் சார்பில் மூத்த செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முகல் வாஸ்னிக், பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றனர். பாஜக சார்பில் ஹன்யாசம் திவாரி வெற்றி பெற்றார்.

பாஜக வெற்றிக் கொடி

கர்நாடக மாநிலத்தில் 4 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பாஜக 3 இடங்களில் வென்றது. பாஜக சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன், ஜக்கேஷ், லகார் சிங் சிரோயா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகான், ஜேடிஎஸ் வேட்பாளர் குபேந்திர ரெட்டி ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
மாநிலங்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் கட்சி மாறி வாக்களித்ததே பாஜக வெல்வதற்கும், காங்கிரஸ் தோற்றதற்கும் காரணமாகும். 
 
 

click me!