
இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.
உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 7 பாகிஸ்தான் பயங்ரவாத முகாம்களை அழித்தனர். இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எல்லைப் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இன்றும் நாளையும் இந்த ஆய்வு நடைபெறுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடக்கும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பாகிஸ்தானை எல்லையாக கொண்ட 4 மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
இதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ முகாம்களுக்கும் ராஜ்நாத் சிங் சென்று ஆய்வு மேற்கொள்கிறார்.