விமானப்படை தளத்தை வீடியோ எடுத்த 2 பேர் சிக்கினர் – தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களா..?

Asianet News Tamil  
Published : Oct 07, 2016, 05:53 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
விமானப்படை தளத்தை வீடியோ எடுத்த 2 பேர் சிக்கினர் – தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களா..?

சுருக்கம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இந்திய விமானப்படையின் ராணுவ தளம் உள்ளது. இங்குள்ள ராணுவ  வீரர்களுக்கு அப்பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் இருந்து உணவுப்பொருட்கள்  நேற்று முன்தினம் வேனில் கொண்டு வரப்பட்டது.

அவற்றை பேக்கரி தொழிலாளர்களான உத்தரபிரதேசத்தை சேர்ந்த  ஜுபேர் ஆலம் அப்துல் ராவுப் அன்சாரி (25),  சலாவுதீன் அன்சாரி (41) ஆகியோர் கொண்டு வந்தனர். விமானப்படை தளத்துக்கு வேனில்  சென்றபோதும்,திரும்பி வந்த போதும் ஜுபேர் தனது செல்போனில் அங்குள்ள பகுதிகளை வீடியோ படம் எடுத்தார். 

அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற  விமானப்படை வீரர்கள், இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே வேனை  நிறுத்தி அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் இருவரும் திடீரென அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் விமானப்படை வீரர்கள் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர், அவர்களை தங்களது அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர்கள் கூறியது, திருப்தி அளிக்காத்தால், இருவரையும் கைது செய்து, தீவிரமாக விசாரிக்கின்றனர்.

எதற்க்காக வீடியோ எடுத்தார்கள், விமானப்படை வீரர்கள், விசாரித்தபோது, எதற்காக தப்பியோடினார்கள். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!