
காவிரி பிரச்சினை குறித்து நாளை பிரதமரை சந்தித்து முறையிட உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, காவிரி நதிநீர் கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா தலைமை செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
புதுவை மாநிலம் சார்பாக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உறுப்பினராக இருப்பார் என தெரிவித்தார்.
காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள தானும், அதிகாரிகளும் செல்ல உள்ளதாகவும்,
காவிரி நீர் பிரச்சனையால் தங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அவர் தெரிவித்தார்.
மேலும், பிரதமரை சந்திக்க அனுமதி வாங்கி உள்ளதாகவும், திட்டமிட்டபடி அவரை நாளை சந்தித்து காவிரி பிரச்சினை குறித்து முறையிட உள்ளதாக தெரிவித்தார்.