
மேற்கு வங்கம் அருகே அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை துர்கா தேவியாக சித்தரித்து அவரது தொண்டர்கள் சிலை வைத்துள்ளனர்.
மேற்கு வங்காளம் நாடியா மாவட்டத்தில் பிராந்திக் எனும் குழு ‘துர்கா தேவி’யை போன்றே மேற்கு வங்க முதலமைச்சர் மம்மதா பானர்ஜியின் சிலையை அமைத்துள்ளனர்.
இந்த சிலை 5.5 துர்கா தேவியை போன்றே 12 கைகளுடன் மம்தாவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலையின் கைகளில் துர்க்கையின் கையில் இருப்பது போன்ற ஆயுதங்களுக்கு பதிலாக சிலையின் ஒவ்வொரு கையிலும் மம்தா பானர்ஜி மேற்கொண்ட வளர்ச்சி பணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜி மக்களின் குறைகளை தீர்ப்பதால் அவரை கடவுளாய் பாவித்து இந்த சிலை உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது.
முன்னதாக, உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்’ நடவடிக்கையை பாராட்டும் வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை ராமராக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.