வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட்-18 செயற்கைக்‍கோள்!

Asianet News Tamil  
Published : Oct 06, 2016, 11:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட்-18 செயற்கைக்‍கோள்!

சுருக்கம்

துல்லியமான தகவல் தொடர்பு, ராணுவ சேவை உள்ளிட்டவைகளுக்‍கு பேருதவியாக இருக்‍கும் இந்தியாவின் ஜி-சாட் 18 செயற்கைக்‍கோள், French Guiana-ல் இருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தகவல் தொடர்பு சேவைக்‍காக இந்தியா விண்ணில் ஏவியுள்ள 14 செயற்கைக்‍கோள்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. தகவல் தொடர்பு சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய விஞ்ஞானிகள் தயாரித்துள்ள ஜிசாட்-18 என்னும் செயற்கைக்‍கோள், Ariane-5 VA-231 Rockrt மூலம் French Guiana-வில் உள்ள செயற்கைக்‍கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 

3 ஆயிரத்து 404 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்‍கோளில், 48 தொலைத்தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மிகவும்  துல்லியமான தகவல் தொடர்பு, ராணுவ சேவை மற்றும் தொலைக்‍காட்சி ஒளிபரப்பு சேவைகளுக்‍கு, இந்த ஜிசாட்-18 செயற்கைக்‍கோள் மிகவும் உதவியாக இருக்‍கும் என்றும், 15 ஆண்டுகள் விண்ணில் செயல்பட்டு தகவல் தொடர்பு சேவையாற்றும் என்றும் இந்திய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

முன்னதாக, வானில் மேகமூட்டங்கள் அதிகமாக காணப்பட்டதால், ஜி-சாட் 18 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்‍கப்பட்டது குறிப்பிடத்தக்‍கது.

PREV
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து கத்துக்கோங்க ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் ட்வீட்!
விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?