
டிக்கெட் ‘புக்கிங்’ முதல் சாப்பாடு ‘ஆர்டர்’ செய்வது வரை அனைத்தையும் ‘ஆப்ஸ்’(செயலி) வடிவில் கொண்டு வந்து, பயணிகளுக்கு விரல்நுனியில் வசதிகளை அளிக்க ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ரெயில்வே துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ரெயில்வே பயணிகளின் தேவை, வசதியை கவனத்தில் கொண்டு, அனைத்தையும் மொபைல் ஆப்ஸ்(செயலி) வடிவில் கொண்டு வர இருக்கிறோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த ஆப்ஸ் மூலம், பயணிகள் டிக்கெட் முன்பதிவு, ரெயில் நிலையத்தில் இருந்து டாக்சி முன்பதிவு, பயணத்துக்கு முன் சாப்பாடு ஆர்டர் செய்வது, சுமைதூக்கும் சேவை , ஓய்வு அறை, படுக்கை விரிப்பு, ரெயில் பெட்டி சுகாதாரமின்மை குறித்த புகார், ஓட்டல் முன்பதிவு, விமான டிக்கெட் முன்பதிவு ஆகியவற்றை ஒருங்கிணைந்து செய்ய முடியும்'' எனத் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், பயணிகளுக்கு அவசர மருத்துவ சிகிச்சை, போலீசில் புகார் அளிப்பது உள்ளிட்ட வசதிகளும் இணைக்கப்பட இருக்கின்றன.
துவக்க விழா....
சரக்கு ரெயிலில் காவலர்களுக்காக சூரிய ஒளித்தகடு மூலம் இயங்கும் மின்விசிறி, விளக்கு, செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகளைக் கொண்ட பெட்டிகளை மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு நேற்று புதுடெல்லியில் தொடங்கி வைத்தார்.
பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இந்த ெபட்டிகள் இனி படிப்படியாக அனைத்துப் சரக்கு ரெயில்களிலும் கொண்டு வரப்படும். சூரியஒளி மின்சாரத்தை சேமிக்கும் பேட்டரிகளும் இந்த பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ளதால், மழைகாலத்திலும் இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.