இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்து... உயிரிழந்த 16 பேருக்கு ராஜ்நாத் சிங் இரங்கல்!!

Published : Dec 23, 2022, 06:10 PM IST
இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்து... உயிரிழந்த 16 பேருக்கு ராஜ்நாத் சிங் இரங்கல்!!

சுருக்கம்

சிக்கிம் அருகே ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிக்கிம் அருகே ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு என்ற இடத்தை நோக்கி 3 வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்றனர். ஜெமா என்ற இடம் வழியாக அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, செங்குத்தான சரிவு கொண்ட ஒரு திருப்பத்தில் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் இளநிலை அதிகாரிகள். 13 பேர் ராணுவ வீரர்கள்.

இதையும் படிங்க: திணறப் போகுது டெல்லி!40,000 பேர்!ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நாளை டெல்லி பிரவேசம்

இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்புப் பணிகள் துரதமாக மேற்கொள்ளப்பட்டன. காயமடைந்த 4 பேரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய ராணுவம் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த 16 இந்திய ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜி20 உச்சி மாநாடு: டெல்லியிலிருந்து 1,000 பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், வடக்கு சிக்கிமில் நேரிட்ட சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர்களின் சேவைக்கும் உறுதிக்கும் நாடு அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்த ராணுவ வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!