ஜி-20 உச்சி மாநாடு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுவதையடுத்து, டெல்லியில் உள்ள ஹனுமான் கோயில் அருகே காஷ்மீரே கேட் ஐஎஸ்பிடி பகுதியில் வசித்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் இரவு தங்கும்விடுதிக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர்.
ஜி-20 உச்சி மாநாடு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுவதையடுத்து, டெல்லியில் உள்ள ஹனுமான் கோயில் அருகே காஷ்மீரே கேட் ஐஎஸ்பிடி பகுதியில் வசித்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் இரவு தங்கும்விடுதிக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர்.
இதற்காக டெல்லியில் உள்ள நகர தங்குமிட மேம்பாட்டு வாரியத்திடம் நகர நிர்வாகம் பேசியுள்ளது. பிச்சைக்காரர்களை அங்கிருந்து அகற்றி காப்பகத்துக்கு கொண்டு செல்லவும் யோசனை தெரிவித்துள்ளது.
திணறப் போகுது டெல்லி!40,000 பேர்!ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நாளை டெல்லி பிரவேசம்
இதற்காக டெல்லிநகர தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின் தலைமைப் பொறியாளர் தலைமையில் 4 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவினர் அரசின் பல்வேறு துறைகளின் ஒப்புதலுடன் பிச்சைக்காரர்களை அகற்றி அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவது குறித்து ஆலோசித்தனர்.
அதில் பிச்சைக்காரர்களை இரவுநேர தங்கும்விடுதிக்க கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லிநகர தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் கூறுகையில் “ டெல்லியில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் டெல்லியிலிருந்து அகற்றப்பட்டு, இரவு நேர தங்குமிடங்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள். இதில் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்கள் காப்பகத்துக்கும், பெண்களாக இருந்தால், அவர்களை பெண்களுக்குரிய காப்பகத்துக்கும், குழந்தைகளாக இருந்தால் குழந்தைகள் நல வாரியத்துக்கும் அனுப்பி வைப்போம்” எனத் தெரிவித்தனர்.
இவுங்க அவுங்க இல்லீங்க! இந்திய போர் விமானப்படையின் முதல் முஸ்லிம் பெண் பைலட் சானியா மிர்சா
இதற்கிடையே வீடுகள் இல்லாதவர்களின் நலனுக்கான தொண்டு நிறுவனம் டெல்லி அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக, பிச்சைக்காரர்களை கட்டாயமாக அரசு அப்புறப்படுத்துகிறது என தெரிவித்துள்ளது.
ஆனால், டெல்லிநகர தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் சார்பில் கூறுகையில் “ பிச்சைக்கார்ரகள் டெல்லியில் கடும் பனியில் படுத்திருக்கிறார்கள், உணவுக்காக பிச்சை எடுக்கிறார்கள். அவர்களை அரசு காப்பகத்துக்கு கொண்டு சென்று நல்ல இருப்பிடத்தையும், உணவையும் இலவசமாக வழங்குகிறது” எனத் தெரிவித்துள்ளது.
டெல்லியில் 2023 செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதி பிரகதி மைதானத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக இப்போது இருந்தே அரசு தயாராகி வருகிறது.