தமிழக அரசியலில் பரபரப்பு - அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் கவர்னர் வித்யாசாகர் ஆலோசனை

First Published Dec 9, 2016, 8:47 AM IST
Highlights


உள்துறை அமைச்சர்  ராஜ்நாத்சிங் உடன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்து பேசினார்.

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்ற கொண்டிருந்த ஜெயலலிதா, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தனது பணிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார். அவ்வப்போது, அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டாலும், அதனை பெரியதாக எடுக்காமல், மக்கள் பணியில் தீவிரம் காட்டினார்.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி நள்ளிரவு முதலமைச்சர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து 6ம் தேதி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், பல்வேறு மாநில கவர்னர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் தமிழக கவர்னராக பொறுப்பேற்று இருக்கும் வித்யாசாகர் ராவ், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசியலின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதித்தகாகவும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது.

click me!