அப்பா ஒவ்வொரு நொடியும் என்னுடன் என் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.. ராகுல் உருக்கமான பதிவு..!

Published : Aug 20, 2022, 10:06 AM ISTUpdated : Aug 20, 2022, 10:08 AM IST
அப்பா ஒவ்வொரு நொடியும் என்னுடன் என் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.. ராகுல் உருக்கமான பதிவு..!

சுருக்கம்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூக கார்கே உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூக கார்கே உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், டெல்லி வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்களும் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க;- மகாத்மா காந்தியின் படத்தை சேதப்படுத்திய காங்கிரஸ் கட்சியினர்.. தட்டி தூக்கிய போலீஸ் - வைரல் வீடியோ!

இதனையடுத்து, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- அப்பா, ஒவ்வொரு நொடியும் என்னுடன், என் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நாட்டிற்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்ற நான் எப்போதும் முயற்சிப்பேன்' என்று பதிவிட்டு ராஜீவ் காந்தி குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

அதேபோல், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்;- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில்  அவருக்கு என் அஞ்சலிகள் என்று பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க;-  Manish Sisodia: Kejriwal : கெஜ்ரிவால் புகழ் வளர்ந்தால் மோடிக்கு பொறுக்காதே! ஆம்ஆத்மி விளாசல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்
மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!