லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவுள்ள கூலி படத்திலும் சத்யராஜ் ரஜினியுடன் நடிக்கிறார். அவருடன் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இருவரும் நடித்தால் நன்றாக இருக்கும் என சினிமா ரசிகர்கள் கூறிவருகின்றனர்
சந்திரபாபு நாயுடு ஆந்திரா முதலமைச்சராக பதவியேற்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்துகொண்டார். அந்த விழா மேடையில் ரஜினிக்கு அருகில் இன்னும் 2 பெரிய தெலுங்கு சூப்பர்ஸ்டார்களும் அமர்ந்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
நரேந்தி மோடி உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று முதல்வராகப் பதவியேற்றார். தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றிப் பெற்ற தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் துணை முதல்வரானார்.
இந்த விழாவில் பவன் கல்யாணின் சகோதரரான சிரஞ்சீவி, என்டிஆரின் மகனான நந்தமுரி பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல தெலுங்கு சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர். அவர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஒரே மேடையில் அமர்ந்திருந்த காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
ரஜினிகாந்த், சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா மூவரும் அருகருகே அமர்ந்துள்ள காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமா ரசிகர்கள் அதனை அதிகம் அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
ரஜினியுடன் கேமியோ!
இந்நிலையில், ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் 2 படத்திற்கு புதிய கேமியோ ரோலில் நடிக்க ஆள் கிடைத்துவிட்டதாகக் கூறி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த் உடன் முக்கியப் பாத்திரங்களில் நடித்தனர். வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
அதைப்போல ஜெயிலர் 2 படத்தில் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா இருவரும் ரஜினியுடன் இணைந்து நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல் பரவத் தொடங்கியுள்ளது. ரசிகர்களின் கமெண்ட்டை கவனிக்கும் படக்குழுவினர் இதுபற்றி விரைவில் அப்டேட் கொடுக்கலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவுள்ள கூலி படத்திலும் சத்யராஜ் ரஜினியுடன் நடிக்கிறார். அவருடன் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இருவரும் நடித்தால் நன்றாக இருக்கும் என சினிமா ரசிகர்கள் கூறிவருகின்றனர்