பேச்சு சுதந்திரம் பேசுவது கேரள கம்யூனிஸ்டு அரசின் பாசாங்கு: ஏசியாநெட் நிருபர் கைதை எதிர்த்து அமைச்சர் கண்டனம்

By SG Balan  |  First Published Jun 13, 2023, 12:47 PM IST

கேரளாவில் ஏசியாநெட் செய்தியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரேசகர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.


கேரளாவில் ஏசியாநெட் நிறுவனத்தின் தலைமைச் செய்தியாளர் அகிலா நந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரேசகர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். மேலும், கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் சித்தாந்தப் பேச்சு வெறும் பாசாங்கு. அதிலிருந்து அவர்களே முரண்பாடுகிறார்கள்" என்று கூறினார்.

Tap to resize

Latest Videos

போபால் அரசு அலுவலகத்தில் மாபெரும் தீ விபத்து: ராணுவ உதவியுடன் 15 மணிநேரம் நீடித்த தீயணைப்புப் பணிகள்

மேலும், பிபிசியில் ஆவணப்படம் வரும்போது, உணர்வுபூர்வமாக பேச்சு சுதந்திரம் பற்றி அறிக்கை விடுகிறார்கள். அதே சமயம் கேரளாவில் பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட்டால், பேச்சு சுதந்திரம் என்ற மார்க்சிஸ்ட் கருத்தை எளிதாக மறந்துவிடுகிறார்கள். கேரளாவில் சிபிஐ அரசாங்கம் பாசாங்குத்தனம் மற்றும் பொய்களின் மீதுதான் கட்டிடத்தின் கட்டப்பட்டுள்ளது" என்று சாடியுள்ளார்.

இடதுசாரி ஆதரவு பெற்ற இந்திய மாணவர் கூட்டமைப்பு மாநில செயலாளர் பி.எம்.ஆர்ஷோ அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், பேஸ்புக்கில் கொடுத்த புகார் மீது முதற்கட்ட விசாரணை கூட நடத்தாமல் அகிலா நந்தகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மகாராஜா கல்லூரி மதிப்பெண் பட்டியல் முறைகேட்டில் முதல்வர் வி.எஸ்.ஜாய் மற்றும் தொல்லியல் துறை தலைவர் டாக்டர் வினோத் குமார், கே.எஸ்.யூ. மாநிலத் தலைவர் அலோசியஸ் சேவியர் மற்றும் கே.எஸ்.யூ. மகாராஜா கல்லூரி பிரிவின் தலைவர் சி.ஏ. பைசல் ஆகியோர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு மேளா: 70000 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் பிரதமர் மோடி!

அரசு கல்லூரியில் விரிவுரையாளர் பதவிக்கு போலி ஆவணங்கள் தயாரித்ததாக முன்னாள் எஸ்.எஃப்.ஐ தலைவர் வித்யா மீது புகார் எழுந்தது. இது தொடர்பான விவரங்களைச் சேகரிக்க செய்தியாளர் அகிலா அவரது ஒளிப்பதிவாளருடன் ஜூன் 6 ஆம் தேதி மகாராஜா கல்லூரி வளாகத்திற்குச் சென்றிருந்தார்.

காலை 11 மணி செய்தியில் முதல்வர் மற்றும் மலையாளப் பிரிவு ஆசிரியரிடம் அகிலா நேரலையில் பேசி விவரங்களைக் கேட்டறிந்தார். வித்யாவின் பதில் தொடர்பாக மாணவகளிடமும் அகிலா கேட்டுள்ளார்.  அப்போதுதான் மாணவர் ஒருவர் அர்ஷோவின் மதிப்பெண் பட்டியல் சர்ச்சையைக் கிளப்பினார்.

இதன் மூலம் எஸ்எப்ஐ மாநிலச் செயலாளரின் மதிப்பெண் பட்டியல் முறைகேடு தொடர்பான சர்ச்சை சூடுபிடித்துள்ளது. இந்த சம்பவத்தை தனக்கு எதிரான சதி எனக் கூறி அர்ஷோ காவல்துறையை அணுகினார். அவர் அளித்த புகாரின் பேரில் கொச்சி மத்திய போலீசார் ஏசியாநெட் நியூஸ் தலைமை செய்தியாளர் அகிலா நந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

படையெடுக்கும் புதுப்புது 5ஜி ஸ்மார்ட்போன்கள்... விலை குறையும் 4ஜி மொபைல்கள்... எதை வாங்கலாம்?

click me!