ராஜஸ்தானின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை, பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அஜ்மீர்-டெல்லி கண்டோன்மென்ட் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. தற்போது இந்த வழித்தடத்தில் இயங்கும் அதிவேக ரயிலை விட, வந்தே பாரத் ரயில் ஒரு மணி நேரம் முன்னதாகவே ரயில் பயணத்தை நிறைவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி தொடங்கிவைப்பதையொட்டி, ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி கண்டோன்மென்ட் இடையே நடைபெறும் இந்த முறை இயக்கப்படுகிறது. காணொளிக் காட்சி மூலம் ரயில் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, "சுதந்திரத்திற்குப் பிறகு ரயில்வேயின் நவீனமயமாக்கலில் அரசு அதிக அக்கரை செலுத்தியதால், 2014 க்குப் பிறகுதான் புரட்சிகர மாற்றம் ஏற்படத் தொடங்கியது" என்றார்.
வந்தே பாரத் ரயிலின் வழக்கமான சேவைகள் வியாழன் முதல் தொடங்கும் என்றும், அன்று முதல் அஜ்மீர் மற்றும் டெல்லி கண்டோன்மென்ட் இடையே இயக்கப்படும், ஜெய்ப்பூர், அல்வர் மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வந்தே பாரத் ரயில் டெல்லி கண்டோன்மென்ட் மற்றும் அஜ்மீர் இடையேயான தூரத்தை 5 மணி 15 நிமிடங்களில் கடக்கும். தற்போது இந்த வழித்தடத்தில் அதிவேக ரயிலாக இருக்கும் சதாப்தி எக்ஸ்பிரஸ், 6 மணி நேரம் 15 நிமிடங்களில் இந்த தூரத்தை கடக்கிறது.
இந்த வந்தேபாரத் ரயில் புஷ்கர் மற்றும் அஜ்மீர் தர்கா உள்ளிட்ட ராஜஸ்தானின் முக்கிய சுற்றுலாத் தலங்களின் இணைப்பை மேம்படுத்துவதோடு, இப்பகுதியின் சமூக-பொருளாதார மேம்பாட்டையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.