ராஜஸ்தான் டெய்லர் கொலை விவகாரம்... பாக். தீவிரவாதிகள் செயலா? உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி தகவல்!!

By Narendran SFirst Published Jun 29, 2022, 4:37 PM IST
Highlights

ராஜஸ்தான் டெய்லர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் டெய்லர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக நுபுர் சர்மாவிற்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் நூபுர் சர்மாவைக் கைது செய்யக்கோரி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதற்காக ராஜஸ்தானை சேர்ந்த டெய்லர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். உதய்பூரில் உள்ள கண்னையா லால் என்பவரின் கடைக்கு கத்தி மற்றும் வாளுடன் சென்ற சிலர் பட்டப்பகலில் கடைக்காரரை கொடூரமாக கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ராஜஸ்தான் டெய்லர் கொலை செய்யப்பட்ட விவகாரம்… ஐந்து மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது!!

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் துணிகளுக்கு அளவீடு செய்வதாக கூறி தையல் கடைக்கு வந்து கடைக்காரரை கொடூரமாக கொன்றதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் கண்ணையாலால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட கொலைகாரர்கள் தையல்காரரின் தலையை ஆயுதத்தால் கொடூரமாக வெட்டியது மட்டுமல்லாமல், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதை அடுத்து கொலையாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். கொலையாளிகள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையிலும், இந்த சம்பவம் காரணமாக ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து… ராஜஸ்தான் டெய்லர் கொடூரமாக வெட்டி படுகொலை!!

இதனை அடுத்து அவர்களிடம் சர்வதேச தொடர்புகள் குறித்து என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இந்தக் கொலை சம்பவம் குறித்து பரபரப்பான தகவல்களை இந்திய உளவுத்துறை வெளியிட்டுள்ளது. அதில், உதய்பூரில் கன்னையா லாலை கொலை செய்தது, பாகிஸ்தானில் செயல்படும் ஒரு தீவிரவாத அமைப்பின் ஸ்லீப்பர் செல்கள் என ரா உளவு அமைப்பு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, கன்னையா லாலை கொலை செய்தவர்களை 4 நாட்களில் தூக்கில் போட வேண்டும் என ராஜஸ்தான் அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!