பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு சென்ற காவலர்கள் 6 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
பிரதமர் மோடியின் பிரசாரக் கூட்டத்தின் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டிருந்த காவலர்கள் சென்று கொண்டிருந்த வாகனம், லாரி ஒன்றின் மீது மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டார். ஜுன்ஜுனு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி கலந்து கொண்டு பேசினார். அவரது பாதுகாப்புக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்தியாவில் முதன்முறை: சென்னை-பெங்களூர் இடையே இரவு நேர வந்தே பாரத் ரயில்!
அந்த வகையில், நெளகா் மாவட்டத்தின் கின்வசா் பகுதி காவல் நிலைய காவலர்களுக்கு பிரதமர் மோடியின் விவிஐபி பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டது. இதற்காக, அந்த காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் 7 பேர் வாகனத்தில் புறப்பட்டுள்ளனர். அவர்களது வாகனம் அதிகாலையில் சுரு மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலை 58-இல் கனுடா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் துணை உதவி ஆய்வாளா் ராமசந்திரா உள்பட 5 போலீஸாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் ஒருவா் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். காயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடுமையான பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சாலை விபத்தில் 6 போலீஸாா் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வா் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்று வரும் ஒருவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.