மதத்தை பற்றி ஒன்னுமே தெரியாத மோடியெல்லாம் எந்த வகையான இந்து? ராகுல் காந்தி கிண்டல்!

By vinoth kumarFirst Published Dec 2, 2018, 9:36 AM IST
Highlights

இந்து மதத்தை பற்றி எதுவுமே தெரியாத மோடி தன்னை இந்து என்று கூறிக் கொள்கிறார், அப்படி என்றால் மோடி எந்த வகையான இந்து என்று ராகுல் காந்தி கிண்டல் அடித்துள்ளார்.

இந்து மதத்தை பற்றி எதுவுமே தெரியாத மோடி தன்னை இந்து என்று கூறிக் கொள்கிறார், அப்படி என்றால் மோடி எந்த வகையான இந்து என்று ராகுல் காந்தி கிண்டல் அடித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி அம்மாநிலத்தில் முகாமிட்டு பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். உதய்பூரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றிலும் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். தொழில் அதிபர்கள், வியாபாரிகள் நிறைந்திருந்த அந்த அரங்கில் பேசிய ராகுல், இந்து மதத்தின் அடிப்படை என்ன? இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை கூறுவது என்ன? அறிவு என்பது அனைவரது வசமும் இருக்கிறது என்பது தான் கீதை கூறும் முக்கிய அம்சம். 

அறிவு என்பது அனைவரை சுற்றியும் உள்ளது என்றும் கீதை கூறுகிறது. உலகில் உயிர் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் அறிவு உண்டு என்பது தான் இந்து மதம் கூறும் சாராம்சம். நமது பிரதமர் மோடி தன்னை ஒரு இந்து என்று கூறிக் கொள்கிறார். ஆனால் இந்து மதத்தின் இந்த சாராம்சம் மோடிக்கு தெரியவில்லை. அப்படி என்றால் மோடியை எந்த வகையான இந்து என்று நாம் கருதுவது? என்று ராகுல் கேள்வி எழுப்பினார்.

அதாவது பிரதமர் மோடி அண்மைக்காலமாக ராகுலுக்கு அறிவு இல்லை என்று மறைமுகமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இதனை மனதில் வைத்தே ராகுல் இப்படி பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

click me!