அசாம் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடிப்பு! 11 பேர் காயம்...

Published : Dec 01, 2018, 09:53 PM IST
அசாம் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடிப்பு! 11 பேர் காயம்...

சுருக்கம்

அசாம் மாநிலத்தில் காமக்கியா-தேக்கார்கான் எக்ஸ்பிரஸ் (Kamakhya Dekargaon Express) ரயிலில் இன்று மாலை ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் 11 பயணிகள் காயமடைந்தனர்.

காமக்கியா- தேக்கார்கான் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், அசாம் மாநிலம் உதல்குரி மாவட்டத்தில் உள்ள ஹரிசிங்கா என்னும் இடத்தின் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென குண்டு வெடித்தது. 

இந்த பயங்கரமான குண்டுவெடிப்பில் பெண் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயமைடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஹரிசிங்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.  ஓடும் ரயிலில் மாலை 6:45 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

மகாராஸ்டிரா உள்ளாட்சி தேர்தலிலும் அடித்து தூக்கிய பாஜக..! உத்தவ், சரத் பவார் மொத்தமா காலி
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!