ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது
மொத்தம் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே இரு முனைப்போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தின் அரசியல் நிலவரம் பற்றி பார்க்கலாம்.
** மொத்த தொகுதிகள் - 200
undefined
** வெற்றி பெற - 101
** வாக்குப்பதிவு நாள் - ஒரே கட்டமாக நவம்பர் 25
** முடிவுகள் அறிவிப்பு - டிசம்பர் 3ஆம் தேதி
** மொத்த வேட்பாளர்கள் - 1,875. இதில் 1,692 பேர் ஆண் வேட்பாளர்கள். 183 பேர் பெண் வேட்பாளர்கள்.
** வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் - 5.25 கோடி (2.73 கோடி ஆண்கள், 2.51 கோடி பெண்கள், 604 மூன்றாம் பாலினத்தவர்கள்)
** முக்கிய கட்சிகள் - பாஜக, காங்கிரஸ்
ராஜஸ்தான் மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அசோக் கெலாட் முதல்வராக பொறுப்பேற்றார். அம்மாநிலத்தில் 1998ஆம் ஆண்டு முதல் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. ஒரே கட்சி இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற வரலாறு அம்மாநிலத்தில் கிடையாது.
கட்சிகள் பெற்ற வெற்றி நிலவரம்
2003 தேர்தல்
பாஜக - 120
காங்கிரஸ் - 56
பகுஜன் சமாஜ் - 2
இதர கட்சிகள் - 22
2008 தேர்தல்
பாஜக - 78
காங்கிரஸ் - 96
பகுஜன் சமாஜ் - 6
இதர கட்சிகள் - 20
மத்தியப்பிரதேச தேர்தல் முழு விவரம்: கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!
2013 தேர்தல்
பாஜக - 163
காங்கிரஸ் - 21
பகுஜன் சமாஜ் - 3
இதர கட்சிகள் - 13
2018 தேர்தல்
பாஜக - 73
காங்கிரஸ் - 100
பகுஜன் சமாஜ் - 6
இதர கட்சிகள் - 21
கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்
2003 தேர்தல்
பாஜக - 39.2 சதவீதம்
காங்கிரஸ் - 35.7 சதவீதம்
பகுஜன் சமாஜ் - 4 சதவீதம்
இதர கட்சிகள் - 21.1 சதவீதம்
2008 தேர்தல்
பாஜக - 34.3 சதவீதம்
காங்கிரஸ் - 36.8 சதவீதம்
பகுஜன் சமாஜ் - 7.6 சதவீதம்
இதர கட்சிகள் - 21.3 சதவீதம்
2013 தேர்தல்
பாஜக - 45.2 சதவீதம்
காங்கிரஸ் - 33.1 சதவீதம்
பகுஜன் சமாஜ் - 3.4 சதவீதம்
இதர கட்சிகள் - 18.4 சதவீதம்
2018 தேர்தல்
பாஜக - 38.8 சதவீதம்
காங்கிரஸ் - 39.3 சதவீதம்
பகுஜன் சமாஜ் - 4 சதவீதம்
இதர கட்சிகள் - 17.9 சதவீதம்
ராஜஸ்தான் மாநிலம் சாதி/மத விவரம்
ராஜஸ்தான் மாநிலத்தில் 89 சதவீதம் இந்துக்கள், 9 சதவீதம் முஸ்லிம்கள், 2 சதவீதம் பேர் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். பட்டியல் சாதி (SC) மக்கள் தொகை 18 சதவீதம், பட்டியல் பழங்குடியினர் (ST) 13 சதவீதம், ஜாட்கள் 12 சதவீதம், குஜ்ஜர்கள் மற்றும் ராஜ்புட்கள் தலா 9 சதவீதம், பிராமணர்கள் மற்றும் மினாக்கள் தலா 7 சதவீதம் உள்ளனர்.
ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்கள் 72 பேருக்கு காங்கிரசும், 70 பேருக்கு பாஜகவும் வாய்ப்பளித்துள்ளது. உயர்சாதி சமூகத்தை சேர்ந்த 44 பேருக்கு காங்கிரஸும், 63 பேருக்கு பாஜகவும் வாய்ப்பளித்துள்ளது. காங்கிரஸ் வாய்ப்பளித்துள்ள ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்கள் 72 பேரில் 34 பேர் ஜாட்கள், 11 பேர் குஜ்ஜார்கள். சச்சின் பைலர் குஜ்ஜார் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
மாநில மக்கள் தொகையில் 9 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இஸ்லாமியர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சி 15 முஸ்லீம்களை களமிறக்கியுள்ளது, பாஜக முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.
ராஜஸ்தான் மாநிலத்தில் 34 ரிசர்வ் தொகுதிகள் உள்ளன. அதுதவிர மேலும் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி, எஸ்.சி. வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
கடந்த தேர்தலில் 33 இடங்கள் எஸ்.சி சமூகத்தினருக்கும், 25 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில், பாஜக 11 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. 25 எஸ்டி தொகுதிகளில், காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும் வெற்றி பெற்றன.