தேர்தலுக்கு முன்பு மீண்டும் ஒரு புல்வாமா சம்பவம்... பாஜகவை டார்கெட் செய்யும் ராஜ்தாக்கரே!

By Asianet TamilFirst Published Mar 10, 2019, 3:29 PM IST
Highlights

இந்தத் தாக்குதல் மூலம் மக்களின் கவனம் மற்ற பிரச்னைகளிலிருந்து திசை திருப்பப்படும். அந்தக் கவனம் தேசபக்தியின் பக்கம் திருப்பி விடப்படும். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக புல்வாமா தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் சம்பவம் நடக்கலாம் என்று மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்ரே பரப்பரப்பாக பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பை ராஜ் தாக்கரே தொடங்கி 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதையொட்டி நடந்த விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற ராஜ்தாக்ரே, பிரதமர் மோடியையும் ஆளும் பாஜக அரசையும் கடுமையாகத் தாக்கி பேசினார். 
 “மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு ராமர் கோயில்  உள்பட எல்லா கொள்கைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது. நான் சொல்வதை மனதில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மக்களவை தேர்தல்  நேரத்தில், புல்வாமா போன்ற மற்றொரு தாக்குதல் நடக்கலாம். இந்தத் தாக்குதல் மூலம் மக்களின் கவனம் மற்ற பிரச்னைகளிலிருந்து திசை திருப்பப்படும். அந்தக் கவனம் தேசபக்தியின் பக்கம் திருப்பி விடப்படும். வீரர்களைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற பாஜக நினைக்கிறது. இந்தச் சதியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்று ராஜ்தாக்கரே பேசினார்.
ராஜ் தாக்கரேவின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

click me!