கார்-லாரி நேருக்கு நேர் மோதல்.... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு..!

Published : Mar 10, 2019, 12:24 PM ISTUpdated : Mar 10, 2019, 12:30 PM IST
கார்-லாரி நேருக்கு நேர் மோதல்.... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு..!

சுருக்கம்

ஜார்க்கண்டில் காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஜார்க்கண்டில் காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பீகார் மாநிலம், அவுரங்காபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் ராஞ்சிக்கு காரில் சென்றுக்கொண்டிருந்தனர். அதிகாலை, ராம்கர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் கார் வேகமாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பெங்கி என்ற கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. 

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த காரில் பயணம் செய்த 3 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து லாரி ஓட்டுநரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்ததால் அப்பகுதியில் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

PREV
click me!

Recommended Stories

திடீர் சிக்கலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்... மோடியை பார்க்க ஓடோடி வந்த யுஏஇ அதிபர்..! பகீர் பின்னணி..!
சம்பள கணக்குல இவ்வளவு பலன்களா? மத்திய அரசு ஊழியர்கள் இனி ராஜாதான்.. நிதி அமைச்சகம் அதிரடி அறிவிப்பு!