நேருவுக்கு சிகரெட் வாங்க தனி விமானம்..! அதிரவைக்கும் ஃப்ளாஷ்பேக்

By karthikeyan VFirst Published Mar 1, 2021, 1:12 PM IST
Highlights

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு சென்றபோது, அவர் விரும்பி புகைக்கும் சிகரெட்டை வாங்குவதற்காக இந்தூருக்கு தனி விமானம் அனுப்பப்பட்ட சம்பவம் அம்பலமாகி, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. 1947ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 1964ம் ஆண்டு நேரு இறக்கும் வரை அவர்தான் இந்தியாவின் பிரதமராக இருந்தார். ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு அவரது மகள் இந்திரா காந்தி, இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி என நேருவின் வாரிசுகள் தான் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டு பிரதமரானதுடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாகவும் இருந்துவருகின்றனர்.

ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பிறகு அவரது மனைவி சோனியா காந்தி மற்றும் மகன் ராகுல் காந்தி ஆகியோரின் தலைமையில் காங்கிரஸ் செயல்பட்டுவருகிறது. இவ்வாறாக நேருவுக்கு பின்னர், அவரது வாரிசுகள் தான் காங்கிரஸை வழிநடத்துகின்றனர். இதுதான் அக்கட்சியின் பெரிய பிரச்னை; அக்கட்சியின் வீழ்ச்சிக்கும் காரணம். காங்கிரஸ் கட்சியின் மீதான கடும் விமர்சனமுமே வாரிசு அரசியல் தான்.

வாரிசு அரசியல், கட்சி மூத்த தலைவர்களிடையே ஒற்றுமையின்மை ஆகியவைதான் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அசைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. தற்போதைய பிரதமர் மோடி ஆடைகளுக்கு அதிகம் செலவு செய்கிறார் என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டிவந்தனர். 

அப்படி விமர்சித்தவர்கள் நாணும் வகையில், ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஜவஹர்லால் நேருவுக்கு பிடித்தமான சிகரெட்டை வாங்க, ஒரு விமானமே போபாலிலிருந்து இந்தூருக்கு சென்ற கதை இந்தியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது மத்திய பிரதேச கவர்னராக இருந்த விநாயக் படாஸ்கர் எழுதிய ராஜ் பவன் குறிப்புகளில் இடம்பெற்றுள்ள தகவல்:

ஜவஹர்லால் நேரு போபால் வந்தபோது, அவரை தனது அரண்மனையில் தங்குமாறு அழைப்பு விடுத்தார் போபால் ராணி. அதை பிரதமராக இருந்தவும் ஏற்றுக்கொண்டார். ஆனால் அப்போது கவர்னராக இருந்த விநாயக் படாஸ்கர், அலுவல் ரீதியான பணிகளுக்காக போபால் வந்திருக்கும் நீங்கள்(நேரு) ராஜ்பவனில் தான் தங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து ராஜ் பவனில் தங்கவிருப்பதை அறிந்த ராஜ்பவன் ஊழியர்கள், நேருவுக்கு பிடித்தமான “555” பிராண்ட் சிகரெட் அங்கு இல்லாததை அறிந்திருந்தனர். சாப்பாடு சாப்பிட்ட பிறகு சிகரெட் பிடிக்கும் பழக்கும் நேருவுக்கு இருந்தது. 555 பிராண்ட் சிகரெட் ராஜ் பவனில் இல்லாததால், அதை வாங்க போபாலிலிருந்து இந்தூருக்கு தனி விமானம் சென்றதாக விநாயக் படாஸ்கர் தனது ராஜ் பவன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சிகரெட்டுக்காக விமானம் சென்ற செலவு, மக்களின் வரிப்பணம்... 
 

click me!