ரக்‌ஷா பந்தன் நாளில் சிறுநீரகத்தை பரிசாக வழங்கிய பெண்! தம்பியின் உயிரைக் காப்பாற்றிய அன்புச் சகோதரி!

By SG Balan  |  First Published Aug 30, 2023, 4:59 PM IST

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓம்பிரகாஷ் மற்றும் ஷீலாபாய் இருவரும் தற்போது குஜராத்தில் அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகின்றனர்.


சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள பெண் ஒருவர் தனது சகோதரரின் உயிரைக் காப்பாற்ற தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முடிவு செய்துள்ளார்.

48 வயதான ஓம்பிரகாஷ் தங்கர் கடந்த ஆண்டு மே மாதம் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார். டயாலிசிஸ் செய்ய வேண்டிய அளவுக்கு அவரது சிறுநீரகங்கள் மோசமாகிவிட்டன. ஒரு சிறுநீரகம் 80 சதவீதமும் மற்றொறு சிறுநீரகம் 90 சதவீதமும் சேதம் அடைந்துள்ளன.

Tap to resize

Latest Videos

நீண்ட யோசனைக்குப் பிறகு, குஜராத்தின் நாடியாட்டில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். சிறுநீரக தானம் செய்பவர் தேவை என்று மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் கூறியபோது, ஓம்பிரகாஷின் மூத்த சகோதாரியே உடனடியாக முன்வந்தார்.

நான் ரெடி தான்... சூரியனை ஆய்வு செய்ய தயாராக இருக்கும் இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம்!

மூத்த சகோதரி ஷீலாபாய் பால் ராய்பூரின் திக்ரபராவில் வசிக்கிறார். அவர் தன் தம்பியின் அறுவை சிகிச்சைக்கு சிறுநீரக தானம் செய்வதற்காக தேவையான அனைத்து சோதனைகளையும் மேற்கொண்டார். சோதனை முடிவுகளில் அவரது சிறுநீரகத்தை ஓம்பிரகாஷுக்குப் பொருத்தலாம் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓம்பிரகாஷ் மற்றும் ஷீலாபாய் இருவரும் தற்போது குஜராத்தில் அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகின்றனர்.

தன் சகோதரனை நேசிப்பதாலும், அவன் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்பதாலும் தான் இதைச் செய்கிறேன் என்று சகோதரி ஷீலாபாய் கூறுகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு சில நாட்களுக்கு முன்பு, ஷீலாபாய் ஓம் பிரகாஷுக்கு ராக்கி கட்டி தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்மைல் பிளீஸ்! விக்ரம் லேண்டரை முதல் முறையாக படம் பிடித்த பிரக்யான் ரோவர்!

click me!