மழை தொடர்பான விபத்துக்களில் செவ்வாய்க்கிழமை மேலும் 21 பேர் இறந்ததால், வடமாநிலங்களில் மழை வெள்ளத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட வடக்கில், இமாச்சலப் பிரதேசம், ஜே&கே, பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு செவ்வாயக்கிழமை மழை சற்று குறைந்ததால் அதிகாரிகள் நிவாரணம், மீட்பு மற்றும் சாலை மறுசீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டனர்.
மழை தொடர்பான விபத்துக்கள், நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக செவ்வாய்க்கிழமை மேலும் 21 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், ஜூலை 8ஆம் தேதி முதல் வடமாநிலங்களில் மழை வெள்ளத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாபில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சட்லஜ் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து பாசில்காவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உ.பி.யில், யமுனை மற்றும் கங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சந்தோசப்படாதீங்க.. அமலாக்கத்துறை வழக்கு விவகாரம் - எதிர்க்கட்சிகளுக்கு அமித்ஷா எச்சரிக்கை
திங்கள்கிழமை இரவு கங்கோத்ரி கோவிலில் இருந்து திரும்பும் மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள கங்னானியில் நெடுஞ்சாலையில் ஒரு மினிபஸ் நசுக்கப்பட்டது. இதில் மூன்று பயணிகள் படுகாயமடைந்து ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்ற விபத்தில் ருத்ரபிரயாகையில் பைக்கில் சென்ற ஒருவர் உயிரிழந்தார். டேராடூனின் புறநகர் பகுதியில் உள்ள கல்சியில், கோடி சாலையில் பாறை சரிந்து வாகனத்தின் மீது மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பலத்த மழை பெய்தது. அடுத்த 24 மணி நேரத்தில், குறிப்பாக குமாவோன் பகுதியில், கனமழை தொடரும் என டேராடூனில் உள்ள வானிலை அலுவலக இயக்குனர் பிக்ரம் சிங் கூறியுள்ளார்.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான இமாச்சல பிரதேசத்தில், செவ்வாய்கிழமை மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் 14,100 அடி உயரத்தில் அமைந்துள்ள சந்தர்டல் ஏரிக்கு அருகில் உள்ள முகாம்களில் சிக்கியிருந்த சுமார் 300 பேரை மீட்கச் சென்ற விமானப்படை ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அங்கு செல்ல முடியாமல் திரும்பியது.
வாங்கத் தூண்டும் விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர்! டாடா பஞ்ச்க்கு சவால் விடும் அதிரடி அறிமுகம்!
திங்கள்கிழமை மாலையில் இருந்து மழை சற்று ஓய்ந்துள்ளதால் மீட்பு மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் வேகமெடுத்துள்ளன. இருப்பினும், சிம்லா, சிர்மவுர் மற்றும் கின்னவுர் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில், நிலச்சரிவு ஏற்பட்ட ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை ஐந்து நாட்களுக்குப் பிறகு போக்குவரத்திற்கு தொடங்கியதாக டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். 5,500 அமர்நாத் யாத்திரை பயணிகளின் வாகனங்கள் ஸ்ரீநகர் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டன.
பஞ்சாபின் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. மேலும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. ஏராளமான வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
சனிக்கிழமை சண்டிகர் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்து இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்கள் இமாச்சலப் பிரதேசத்தின் உனாவில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காரில் இருந்த மூன்றாவது நபரைக் காணவில்லை என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
3வது முறையாக எஸ்.கே.மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
அண்டை மாநிலமான ஹரியானாவில், அம்பாலா மாவட்டத்தில் செவ்வாய்கிழமை இரண்டு பேர் வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர். வெள்ளம் காரணமாக அம்பாலா-லூதியானா தேசிய நெடுஞ்சாலை உட்பட பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. யமுனையில் இருந்து வரும் நீர் கர்னாலில் உள்ள 47 கிராமங்களை மூழ்கடித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் செவ்வாயன்று மூன்று பேர் பலியாகியுள்ளனர். சீதாபூர் மற்றும் மெயின்புரியில் மின்னல் தாக்கியதில் இருவர், இறந்தனர். கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் 42 வயதான ஒருவர் மழையில் வீடு இடிந்து விழுந்ததில் இறந்தார். ஹரியானா மாநிலம் கடந்த 48 மணி நேரத்தில் தஜேவாலா அணையில் இருந்து 3 லட்சம் கனஅடி தண்ணீரை யமுனை ஆற்றில் திறந்துவிட்டிருப்பதால், ஆக்ரா மற்றும் மதுரா மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் ஐந்து நாட்களுக்குப் பிறகு மழை பெய்தது. அதிகபட்சமாக சிரோஹி மாவட்டத்தில் ஷியோகஞ்ச் பகுதியில் 130 மிமீ மழை பதிவானது. "ராஜஸ்தானில் செவ்வாய்கிழமை வரை 254 மிமீ மழை பெய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை 11 வரை பெய்த 119 மிமீ மழையை விட 112% அதிகமாகும்" என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
2075ஆம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா அமெரிக்காவை முந்தும்: கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு